திருவள்ளுவர்
ஆண்டைப் போற்று!
சித்திரை
ஆண்டை நீக்கிச்
செந்தமிழ்
ஆண்டை ஏற்போம்!
நித்திரை
இன்னும் ஏனோ?
நிறைந்துள
பகையை வெல்க!
இத்தரை
எங்கும் தீயர்
இழிவினை
செய்வார்! தோழா!
முத்திரை
யிட்டே சொன்னேன்
முதன்மொழி தமிழே ஆகும்!
முதன்மொழி தமிழே ஆகும்!
வள்ளுவர்
ஆண்டைப் போற்று!
வண்டமிழ்ப்
புகழைச் சாற்று!
கிள்ளுவர்
போக்கை மாற்று!
கிளர்ந்தெழும்
பணிகள் ஆற்று!
அள்ளுவர்
நம்மின் செத்தை
அரியென
நிற்பாய் காத்து!
துள்ளுவர்
பகைவர்! மோதித்
துரத்தியே
இடுவாய் கூத்து!
பாட்டரசர்
கி. பாரதிதாசன்
கம்பன்
கழகம் பிரான்சு
தொல்காப்பியர்
கழகம் பிரான்சு
14.04.2020
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!
RépondreSupprimerதமிழ் வலையுலகை மீண்டும் மணக்கச் செய்யும் ஒரு எண்ணம்...!
RépondreSupprimerதமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி...!!
தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய நடவடிக்கை...!!!
உருவாகியது புதிய வலைத்திரட்டி: வலை ஓலை
நமது, வலை ஓலை வலைத்திரட்டியில் பரீட்சார்த்தமாக 31 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
30ஆவது வலைத்தளம்: நினைத்துப் பார்க்கிறேன்
அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.
உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்
எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்
வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம்.
இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு
தமிழில் புதிய சொற்களை அறிமுகப்படுத்த ஓர் வலை அகராதி: சொல்
ஒரே பார்வையில் எமது தளங்கள்:
1. வலை ஓலை
2. எழுத்தாணி
3. சொல்
தங்கள் பதிவு - எமது திரட்டியில்: வலை ஓலை
முக்கிய அறிவித்தல் : தயவு செய்து எமது வலைத் திரட்டியின் மெனுவில் இணைக்கப்பட்டுள்ள வகைப்படுத்தல்களின் அடிப்படையில் தங்கள் வலைத்தளத்தில் குறிச் சொற்களை இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனை பின்பற்றுமாறு தயவுடன் வேண்டிக் கொள்கிறேன். காரணம், பதிவுகள் தானாக இணையும் வகையில், வலை ஓலை வலைத்திரட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்தந்த பதிவுகள் உரிய மெனுவில் இணையும் வகையிலும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
நீங்கள் சரியான மெனுவுக்கான குறிச்சொல்லை தங்கள் பதிவில் இணைத்தால் மட்டுமே தங்கள் பதிவைத் தேடி, எமது வலைத் திரட்டிக்கு வரும் வாசகர்களுக்கு அதனை அடையாளம் காட்டும். ஆகவே, தங்களுக்குப் பிடித்த குறிச்சொற்களை இணைத்துக் கொள்வதோடு நின்று விடாமல், சிரமம் பாராது, எமது மெனுவில் உள்ள குறிச் சொற்களை அவதானித்து அதனையும் உங்கள் பதிவில் இணைத்துக் கொள்ளுங்கள்.
அனைவருக்கும் நன்றி!
-வலை ஓலை
அருமையான பிரகடனம்
RépondreSupprimer