mercredi 7 août 2019

மலர்ப்பந்தம்

மலர் ஓவியக் கவிதை
  
[ஏகபாதம்]
  
கண்ணா வாழ்க!
கண்ணா வாழ்க!
கண்ணா வாழ்க!
கண்ணா வாழ்க!
  
[சொல்லணியுள் மடக்கு வகைகளுள் ஒன்றாகிய நான்கடியும் மடக்காய் வருவது ஏகபாதம் ஆகும்] ஓரடியே நான்கடியும் மடக்காய் வருவது.
  
கண்ணா வாழ்க - என்னைக் காக்கும் திருக்கண்ணா வாழ்க!
கண் நா ஆழ்க - என் கண்ணிலும் நாவிலும் ஆழ்ந்திருப்பாய்!
கண் நா ஆழ்க - [கண் - அறிவு] அறிவாக என் நாவில் ஆழ்ந்திருப்பாய்!
கண் நா ஆழ்க - [கண் - மூங்கில்] வேய்ங்குழல் இசையாக என் நாவில் ஆழ்ந்திருப்பாய்!
  
இது, நடுப்பொகுட்டினின்றும் மேல் வலக்கோணத்துள்ள அகவிதழ் புறவிதழ் சென்று வலமே அடுத்த புறவிதழ் அகவிதழ்வழியே பொகுட்டினில் முதலடி நிறைவுறும். இவ்வாறே மற்ற மூன்றடிகளும் காண்க.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
06.08.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire