jeudi 8 août 2019

மலர்ப்பந்தம்


மலர் ஓவியக் கவிதை
  
மாதேகா! துாயா! மாதா..வா!
மாதாவா நேயா! மாவாயா!
மாவாயா! மேயா! மாவாகா!
மாவாகா! மாயா! மாதே..கா!
  
துாயா - துாய்மையானவனே!
நேயா - அன்பானவனே!
மேயா - ஆடு மாடுகளை மேய்த்தவனே!
மாயா - மாயம் புரிந்தவனே!
  
மாதேகா - அழகுடைய மேனியை உடையவனே!
மாதா..வா - என் தாயே வா!
மா தா வா - [மா - பெரிய] [தா - வலிமை] பெரிய வலிமை உடையவனே வாராய்!
மா வாயா - உலக்தை உண்ட திருவாயை உடையவனே!
மா ஆயா - பெருமையுடைய ஆயர் குலத்தில் பிறந்தவனே!
மா வாகா - [வாகு - திறமை] மிக்க திறமையுடையவனே!
மா வா கா [மா - செல்வம்] செல்வனே வராய்! காப்பாய்!
மாதே கா - [மாது - பெண்] பெண்ணாகிய என்னைக் காத்திடுவாய்!
  
இது, நடுப்பொகுட்டினின்றும் மேல் வலக்கோணத்துள்ள அகவிதழ் புறவிதழ் சென்று வலமே அடுத்த புறவிதழ் அகவிதழ்வழியே பொகுட்டினிழிந்து அடுத்த அகவிதழ்வழி புறவிதழ்சென்று முதலடி முற்றி, மறித்தும் பொகுட்டினின்றும் கீழ் வலக்கோணத்துள்ள அகவிதழ் புறவிதழ்வழி அடுத்த கீழ்க்கோணத்துள்ள புறவிதழ் அகவிதழ்சென்று பொகுட்டினிழிந்து கீழ்க்கோணத்துள்ள அகவிதழ்வழி அதன் புறவிதழ் சென்று இரண்டாமடி முற்றி, மறித்தும் பொகுட்டினின்றும் கீழிடக்கோணத்துள்ள அகவிதழ் புறவிதழ்வழி இடக்கோணத்துள்ள புறவிதழ் அகவிதழ்சென்று பொகுட்டினிழிந்து மேலிடக்கோணத்துள்ள அகவிதழ்வழி அதன் புறவிதழ் சென்று மூன்றாமடி முற்றி, மறித்தும் பொகுட்டினின்றும் மேலிடக்கோண அகவிதழ் புறவிதழ்வழி அடுத்த மேற்கோணத்துள்ள புறவிதழ் அகவிதழ்சென்று பொகுட்டினிழிந்து முதலடி தொடங்கிச் சென்ற கோணத்திதழ்களில் சென்று நான்காமடி முற்றிவாறு காண்க.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
08.08.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire