என்னருமைத் தம்பிரூபன் யாழ்ப்பா வாணர்
இணைந்திங்கு நடத்துகின்ற
கவிதைப் போட்டி!
பொன்னருமை நெஞ்சேந்திப் புலமை யேந்திப்
பூவருமை மணமேந்தி
அழைத்தார்! தேனின்
இன்னருமைக் கவிதைகளைப் பாட வாரீர்!
இனியதமிழ்
மாண்புகளைச் சூட வாரீர்!
மென்னருமை மலர்தூவி வாழ்த்து
கின்றேன்!
09.08.2014
அருமை பகிர்வுக்கு நன்றி !கவிதை போட்டி சிறக்க வாழ்த்துக்கள் ....!
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
கவிதை நிகழ்வைக் கமழ்ந்திடச் செய்வீா்
புவியில் பெருகும் புகழ்!
கவிஞர்களி ஊக்குவிக்கும் ரூபன் ,யாழ்ப் பாவாணன் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
RépondreSupprimer
Supprimerவணக்கம்
பாரதியே வந்தெமைப் பாராட்டும் இன்பத்தைச்
சீருடன் பெற்றேன் செழித்து!
பாராட்டிற்குரிய முயற்சிதான் ஐயா
RépondreSupprimerவாழ்த்துவோம்
தம 2
Supprimerவணக்கம்!
வண்ணத் தமிழை வளாக்கும் செயலனைத்தும்
மண்ணில் மணக்கும் மலர்ந்து!
மரபுரைக்கும் பாவலரும் நடுவ ரானார்!
RépondreSupprimer...மயக்குகின்ற தமிழ்க்கவிதை மடைதி றக்கும்!
உரம்கொண்ட நெஞ்சங்கள் உயிர்வ டித்தே
...உணர்வின்வாய் படுந்தோறும் உவகைத் துள்ளல்!
குரங்காகும் நெஞ்சத்தில் குவளைத் தேனைக்
...கொண்டூட்டிக் குடித்திடவே கொடுத்தார் கூலி!
சிரம்தாழ்த்தி வணங்குகிறாள் தமிழாள் ரூபன்,
...சீறியாழ்ப் பாவணர் பணிகள் வாழி!
அய்யா
Supprimerவணக்கம்.
பாவாணர் எனத் திருத்திப்படிக்க வேண்டுகிறேன்!
தவறு, பின்னூட்டத்தில் நேரே தட்டச்சுச் செய்து,
மீளப் பாராமையால் நேர்ந்தது!
மன்னிக்க!
Supprimerவணக்கம்!
வலைப்பதிவின் வழியாக வளங்கள் வார்க்கும்
வண்ணமிகு கவிவாணா் சோசப் ஐயா!
கலைப்பதிவின் வழியாகக் கருத்தைத் தந்தார்!
களித்துநடம் கண்டிடுமே கவிஞன் நெஞ்சம்!
சிலைப்பதிவின் அச்சாக நிலைத்து நிற்க
சிரீயாழ்வாழ் பாவாணா் ரூபன் கூடி
மலைப்பதிவின் மேன்மையென அறிக்கை யிட்டார்!
வாழ்த்திடுவோம்! வளா்த்திடுவோம்! தமிழே ஓங்கும்!
கரவொலிகள் வான்முட்டக் கவிதை மேகம்
RépondreSupprimer...கண்திறக்கும்! கலைவதனால் இடியென் றெண்ணும்!
விரல்பிறக்கும் விந்தைவரி விழிகள் கூடி
...வாய்பிளக்க வைக்கின்ற வாணர் வாரீர்!
சரவெடியாய் முழங்கட்டும் சொற்கள் தம்முள்
...சமர்செய்து கிளம்பட்டும்! கவிதைப் போரை
வரவேற்போம்! வாழ்த்திடுவோம்! வருக இங்கே
...வீழ்ச்சியில்லை வெல்வதெனில் தமிழே வெல்லும்!
Supprimerவணக்கம்!
கவிவானில் கதவுகளைத் திறந்து வைத்தார்
கவிக்குயில்கள் வந்தாட! வண்ணம் கொண்ட
புவிவானில் பொலிகின்ற காட்சி யெல்லாம்
புனைகின்ற தமிழ்வானில் காண லாமே!
சுவை..வானின் விாிவாக விஞ்சி நிற்க
சூட்டிடுவீர் கவிதைகளை! கற்போர் நெஞ்சுள்
அவைதேனின் மழைபொழியும்! சந்தம் ஏந்தும்
அடியெல்லாம் இடியாகும்! தமிழே மின்னும்!
உலகெங்கும் தமிழ் வாழ
RépondreSupprimerஉலக வலைப்பதிவர் நாம்
ஒன்றிணைந்து போட்டி போடுவோம்
என் அன்பான உறவுகளே
"மேதினியில் செந்தமிழைப் பரவச் செய்வீர்!" என
கி.பாரதிதாசன் ஐயாவின் வேண்டுதலை
ஏற்று நாம் போட்டியில் இறங்குவோம்
ஈற்றில் வெற்றியும் காண்போம் வாரீர்!
Supprimerவணக்கம்!
வெற்றிக் கனியை விரும்பி, வியன்தமிழைப்
பற்றிப் படைத்திடுவீா் பாட்டு!
வணக்கம் ஐயா!
RépondreSupprimerஆற்றும் பணிகள் அளவிடக் கூடுமோ?
போற்றும் இவர்களைப் பூமியே! - ஏற்கும்
தலைமைக் கவிச்சம ருஞ்சிறக்கும் உம்மால்!
வலையுலகும் வாழ்த்தும் மகிழ்ந்து!
எண்சீர் விருத்தத்தில் இயம்பிய
கவிதைப் போட்டி நிகழ்வுப் பகிர்வு மிக அருமை ஐயா!
மிக்க நன்றி!
போட்டி சிறப்படைய அனைவருக்கும்
என் உளமார்ந்த இனிய நல்வாழ்த்துக்கள்!
Supprimerவணக்கம்!
வலையுலகம் நன்றே தமிழ்வளர்த்தால் நம்மின்
நிலையுயரும் நன்றே நிலைத்து!
நல்ல முயற்சி! இந்தப் போட்டி சிறக்க வாழ்த்துக்கள். படைப்பாளிகளை ஊக்குவிக்கும் தம்பி ரூபன், திரு யாழ்ப்பாவாணன் இருவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்!
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
நல்ல செயல்களை நாளும் வளர்த்திட்டால்
பல்கும் இனிமை படா்ந்து!
ஐயா, நானும் முயற்சிக்கலாமா ?
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
முயற்சி திருவினை ஆக்கிடுமே! முற்றும்
பயிற்சி அளிக்கும் பயன்!
அழைப்பிதழ் கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா !
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
அம்பாள் அடியாா் அருந்தமிழ்ப் பாட்டெழுதி
நம்மொழி காத்திடுவார் நன்கு!
அருமை!
RépondreSupprimerநல்ல முயற்சி!
வாழ்த்துக்கள் கவிஞரையா!
Supprimerவணக்கம்!
பூங்கொடி வந்து புனையும் புகழ்கவியில் !
மாங்கனி வீசும் மணம்!
RépondreSupprimerஒப்பில் தமிழை உலகம் உணா்ந்திடவே
செப்பும் செயல்கள் சிறந்தோங்கும்! - எப்போதும்
பாட்டுக் கலைவளா்க்கும் பாவலா் இன்பமுறும்
போட்டி! வணங்குகிறேன் பூத்து!
Supprimerவணக்கம்!
போட்டி சிறக்கப் புனைந்தீர் கவிதை!கைக்
கூட்டி வணக்கம் குவிக்கின்றேன்! - ஊட்டிமலை
ஊட்டும் குளிராக ஒண்டமிழ்ப் பாக்களைத்
தீட்டி மகிழ்வீா் திரண்டு!
வணக்கம்
RépondreSupprimerஐயா.
ஏழுலகையும் திறக்கும் திறவு கோல் போல.
வார்த்தைகள்.ஓங்கி ஒளிர்கிறது.
கவி விளம்பரத்திற்கு செப்பிய வரிகள்
கண்டு மகிழ்ந்தேன்
த.ம 9வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Supprimerவணக்கம்!
எல்லா உலகையும் இன்பத் தமிழாளும்!
பொல்லாப் பகையைப் பொசுக்கு!