mercredi 27 août 2014

கம்பன் விழா மலர் - 2011



12/11/2011 - 13/11/2011
பத்தாம் ஆண்டு கம்பன் விழா மலர்
கம்பன் கழகம் பிரான்சு
      விருப்பமுடையோர் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்

15 commentaires:



  1. பத்தாண்டு மின்னும்! பசுந்தமிழ் அன்னையின்
    சொத்தாண்டு மின்னும்! சுவைத்திடுவீா்! - புத்தாண்டு
    போன்று பொலியும் புகழ்மலரைப் போற்றிடவே
    ஒன்றிப் படிப்பீா் உவந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஒன்றிப் படித்தாய்! உயர்கம்பன் நல்லடிக்கு
      நன்றி வடித்தாய் நறுந்தமிழில்! - குன்றின்
      விளக்காய்க் கொடுத்திட்ட வெண்பா ஒளிரும்!
      விளைத்தாய் வியக்கும் விருந்து!

      Supprimer
  2. வணக்கம் ஐயா!

    பத்தாம் வருடத்துப் பைந்தமிழ்க் கம்பனிதழ்
    கொத்தாய் விரியுது கூடியே! - வித்தாய்
    விளைக்க அறிவும் விரவும்! உணர்ந்து
    திளைக்கவே காத்திடுவோம் தேர்ந்து!

    அழகிய நிழற்பட முன்பக்கத்துடன் பத்தாம் ஆண்டு மலர் மிளிர்கிறது.
    அதிக பக்கங்களுடன் உள்ளே பயன்தரும் விடயங்களும் ஏராளம்!

    பதிவிறக்கிக் கொண்டேன். பாதுகாக்க வேண்டிய மலர்!

    பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வித்தாய் விளைத்ததமிழ் வோ்விட்டு மின்னுலகில்
      கொத்தாய் வளர்ந்து கொழித்தாடும்! - முத்தாக
      மின்னும் கவிவடித்தீா்! இன்தேன் சுவையளித்தீர்!
      இன்னும் எழுதுக இங்கு!

      Supprimer
  3. வணக்கம் கவிஞரையா!

    பத்தாம் ஆண்டுக் கம்பன் இதழ் கனதியாக இருக்கின்றது.
    அதிக பக்கங்களுடன் அறிவுக்கு விருந்தாக
    நிறைய விடயங்களையும் தாங்கி அழகாக இருக்கின்றது.

    நிதானமாகப் படிக்க வேண்டும்! பதிவிறக்கம் செய்துள்ளேன்!
    வாழ்த்துக்கள் கவிஞரே!

    RépondreSupprimer
    Réponses


    1. வணக்கம்!

      அாிய மலாினை ஆழ்ந்து படிப்பீா்!
      பொிய நலங்களைப் பெற்று!

      Supprimer
  4. பதிவிறக்கம் செய்கிறேன் ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பதிவிறக்கம் செய்து பயனுறுவீா்! உங்கள்
      மதிசிறக்கும் நன்றே மலர்ந்து!

      Supprimer
  5. பதிவிறக்கம் செய்து கொண்டேன்
    நன்றி ஐயா

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஒருபத்து அகவையை ஓதும் மலரை
      அரும்சொத் தெனக்காப்பாய் ஆழ்ந்து!

      Supprimer
  6. Réponses

    1. வணக்கம்!

      வாக்களித்தீா் என்றன் வணக்கம்! நன்றியெனும்
      பூக்கொடுத்தேன் நெஞ்சம் புலர்ந்து!

      Supprimer
  7. வணக்கம் ஐயா !

    மனம் மகிழத் தந்த நற் செய்தி கண்டு மகிழ்ந்தேன் ! என்
    இனிய வாழ்த்துக்களும் இங்கே உரித்தாகட்டும் ஐயா .
    பகிர்விற்கு மிக்க நன்றி .

    RépondreSupprimer
  8. சிறந்த, அருமையான வெளியீட்டு முயற்சி
    பாராட்டுகள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கொஞ்சும் தமிழைக் கொடுக்கும் மலர்படித்தால்
      நெஞ்சம் மணக்கும் நிறைந்து!

      Supprimer