lundi 11 août 2014

மகளிா் விழா மலா் 2014



29.06.2014
கம்பன் கழகம் மகளிர் அணி நடத்திய
மகளிா் விழா மலர்
விருப்பமுடையோர் பதிவிறக்கம் செய்துகொள்ளவும் 

12 commentaires:

  1. விழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மலரைப் படித்து மகிழ்ந்திடுவீர்! இன்பம்
      குலவும் தமிழில் குளித்து!

      Supprimer
  2. நன்றி ஐயா
    எனதுமுக நூலில் பகிர்ந்துள்ளேன்
    தம 4

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      முகநுால் பதிவிற்கு முத்து வணக்கம்!
      அகமேல் அளித்தீா் அமுது!.

      Supprimer
  3. வணக்கம் ஐயா!

    மகளிர் விழாவில் மலர்ந்த மகிழ்வே!
    புகழினைக் காட்டிப் பொலிந்தார்! - திகழும்
    பெருமையாற் பீடுறும் பெண்தான் உலகை
    அருமையாய்க் காப்பா(ர்) அணைத்து!

    கண்களையும் மனதையும் கவரும் மகளிர் விழா மலர்!
    மிக மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருப்பதைக் கண்டேன்.
    அருமை! பயனுறு விடயங்கள் பல உள்ளனவே!.
    பதிவிறக்கிக் கொண்டேன்.

    பகிர்வினுக்கு மிக்க நன்றியுடன் இனிய வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வீடும் வியன்தமிழ் நாடும் உயா்ந்திடவே
      பாடும் இளமதியீா்! பாவலன்நான் - சூடும்
      வணக்கம் சுவைத்திடுவீா்! வாழ்த்துகிறேன் உம்மின்
      மணக்கும் தமிழில் மகிழ்ந்து!

      Supprimer
  4. வணக்கம் கவிஞரையா!

    மகளிர் விழா மலரின் மணம் மனதை மயக்குகிறது!
    சிறப்பாக இருக்கின்றது.
    படிக்கவேண்டும். பதிவிறக்கிப் பாதுகாக்கின்றேன்.
    அருமை!
    வாழ்த்துக்கள் கவிஞரே!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பதிவிறக்கம் செய்து பசுந்தமிழைக் கற்று
      மதிமணக்கச் செய்தீா் மகிழ்ந்து!

      Supprimer

  5. பெண்ணின் பெருமையைப் பேசும் மலா்கண்டேன்!
    கண்ணில் கமழும் கலைகண்டேன்! - எண்ணில்
    பெருகிடும் இன்பத்தைப் பெற்றுவந்தேன்! செந்தேன்
    பருகிடும் வண்டாய்ப் பறந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பறந்துவரும் வண்டானாய்! பாடிவரும் என்னுள்
      சிறந்துவரும் நட்பானாய்! சிந்தை - நிறைந்துவரும்
      இன்பக் கவிபடைக்கும் என்னுயிா்த் தோழா!உன்
      அன்பே அமுதெனும் ஆறு!

      Supprimer
  6. வணக்கம்
    ஐயா
    மாதர் தன் ஆற்றலைச்சொல்லும்
    கவிப்பாக்கள் நிறைந்த நூல் கண்டு மகிழ்ந்தேன்
    பதிவிறக்கம் செய்கிறேன் ஐயா.
    பகிர்வுக்கு நன்றி
    த.ம 8வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மாதா் மனங்களிலே மண்ணின் மணம்வீசும்!
      ஓதும் இதழை உளத்து!

      Supprimer