dimanche 31 août 2014

துயரம் கூடுதடி!


துயரம் கூடுதடி

மாலை மயங்கும் நேரமடி - வா..வா
மயிலே மாந்தோப்(பு) ஓரமடி
சோலைக் குயிலும் கூவுதடி - காதல்
சோகம் என்னை மேவுதடி

இன்பக் கனவின் ஏக்கமடி - எனக்கு
இரவில் இல்லை தூக்கமடி
துன்பம் மனதில் கூடுதடி - உன்றன்
துணையை நெஞ்சம் நாடுதடி

நிலவும் வானில் உலவுதடி - காதல்
நினைவில் உள்ளம் இளகுதடி
பலவாய் எண்ணம் நிலவுதடி - உன்னைப்
பார்த்தென் நெஞ்சம் குலவுதடி

08.08.1985

32 commentaires:

  1. வணக்கம்
    ஐயா.

    அழகிய கவிதை கண்டு மகிழ்ந்தேன்... பகிர்வுக்கு நன்றி ஐயா
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பழகும் தமிழில் படைத்தேன் அவளை!
      பழமாய் இனிக்கிதே பாட்டு

      Supprimer
  2. Réponses

    1. வணக்கம்!

      அருமைத் தமிழில் அளித்தேன் அவனை!
      பெருமை அனைத்தும் பிசைந்து!

      Supprimer
  3. Réponses

    1. வணக்கம்!

      வாக்கோடு வார்த்த வளா்கருத்து, வண்டமிழின்
      பூக்காடு பூத்த பொலிவு

      Supprimer
  4. கவிதை பழசா இருந்தாலும் புது சுவையோட தான் இருக்கு நமது வலைத்தளம் : சிகரம்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      முன்பு மொழிந்த கவிதைகளை முத்தென்று
      இன்று கொடுத்தேன் இனித்து!

      Supprimer
  5. Réponses

    1. வணக்கம்!

      மின்னிதழ் கண்டு வியக்கின்றேன்! இவ்விதழைப்
      பொன்னிதழ் என்பேன் புகழ்ந்து!

      Supprimer
  6. மனவானில் காதல் நிலவடி - அதற்கு
    மங்கை நீயே காரணமடி
    புது இன்பம் பூத்ததடி - அதனால்
    உன்னை பூஜிக்க நினைக்குதடி

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      முத்தமிழ் மங்கையிடம் மோகம் மிகக்கொண்டு
      புத்தமிழ் உண்டேன் புகழ்ந்து

      Supprimer
  7. வணக்கம் கவிஞரே!

    என்ன இனிமை!..
    சொக்கிப்போக வைக்கும் பாடல்!
    மனம் எங்கோ பறக்கின்றதே! வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சொக்கி உருகுகிறேன்! துாயவள் நட்பெய்த
      எக்கிக் கிடக்கிறேன் இங்கு!

      Supprimer
  8. வணக்கம் !

    சிறப்பான கவிதை மனதோடு ஒட்டிக்கொண்டது !
    வாழ்த்துக்கள் ஐயா .

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஒட்டி உறவாடும் ஒய்யாரச் சுந்தாியைக்
      கட்டி அணைக்கும் கனவு!

      Supprimer
  9. வணக்கம் ஐயா!

    கூட்டிய தோதுயரம்! கூறினீரே பாடலாக!
    ஊட்டினீர் பாவகை ஒன்று!

    மிக அருமையான இலகுவான சீர்களுடன்
    ஒரு இசைப்பாடலைப் படிப்பவரை எப்படி ஈர்க்கலாமென
    எழுதும் உங்கள் புலமை கண்டு உள்ளம் சிலிர்த்தேன்!
    ஏக்க உணர்வை எத்தனை இயல்பாக, இனிமையாக
    இப்படியும் எழுதலாம் என இங்கு கண்டு கொண்டேன்!

    நீங்கள் பாடும் ஒவ்வொரு பாவிலும்
    நான் அங்கு எவ்வகையாகச் சீர்கள் சேர்த்துள்ளீர்களென
    அறிவதிலும் ஆர்வமாக உள்ளேன்.

    அதன்படி நானும் மிகச் சிறியதாக முயன்றேன். தருகிறேன் இங்கு.
    திருத்தத்தினைக் கூறுங்கள் ஐயா!

    நினைவு என்றும் உன்வசமே! - தமிழே
    நிறைவாய் உயிரில் உள்ளவளே!
    கனவு பலிக்க வேண்டுவோமே! - நாங்கள்
    காண்போம் வெற்றி நிச்சயமே!

    மிக்க நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      பாடும் வண்ணம் படைத்த கவிகண்டேன்!
      சூடும் கவியைத் தொடர்ந்து!

      Supprimer
  10. காதல் சுவை கவிதை தேன்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      காதல் மதுவுண்டு காற்றில் பறக்கின்றேன்
      மோதல் தடையை முறித்து!

      Supprimer
  11. கூடும் துயர்குறையும் கொண்டல் அவள்பொழிய
    ஓடிடுமுள் வெப்பம் ஒளிந்து !

    அழகான வரிகள் ஆழமான ஏக்கங்களுடன்
    அருமை அருமை ஐயா
    வாழ்க வளமுடன்
    தம 9

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      கொண்டல் குழலழகி! கோல மயிலழகி!
      கண்டால் பிறக்கும் கவி!

      Supprimer

  12. துன்பம் கொடுத்துத் துவட்டுகின்ற துாயவளின்
    இன்ப விழிகளுக்குள் ஈடுளதோ? - அன்பனே
    அன்று படைத்த அருந்தமிழ்ப் பாட்டுக்கள்
    இன்றும் இனிக்கும் எனக்கு!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      என்றும் மணக்கும் இனியதமிழ் என்மனத்துள்
      நின்று மணக்கும் நிலைபெற்றேன்! - என்றென்றும்
      அன்பு மலர்ச்சோலை நன்றே அழகொளிர
      என்னவள் வேண்டும் எனக்கு!

      Supprimer
  13. கவிதை அருமை ஐயா...
    வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      செவியில் அவள்குரல் சேரும் பொழுதில்
      கவிதை சிறக்கும் கமழ்ந்து!

      Supprimer
  14. கவிதைகள் என்னை சிலிர்க்க வைக்கிறது கவிஞரே. அதன் பிரதிபலிப்பு நானும் கொஞ்சம் முயற்சி செய்துள்ளேன். பிழை யென்றால் அடியேனை மன்னித்து விடுங்கள் கவிஞரே !தொடர வாழ்த்துக்கள் ....!

    வண்ண விழிப் பார்வையடி
    வந்து என்னை கொல்லுதடி. உன்
    எண்ணம் எல்லாம் முல்லையடி
    வந்து தரும் தொல்லையடி

    எனக்கு எத்தனை சொந்தமடி
    இருந்தும் நித்திரை இல்லையடி
    எனக்கன்பை தானம் செய்திடடி
    இல்லை துயரமென்றும் கூடுமடி

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      உன்னைக் கவிபாட என்கவிதை செய்யுமெனில்
      இன்பம் இரட்டிக்கும் இங்கு!

      Supprimer
  15. அருமை ஐயா! என்னுடைய http://www.esseshadri.blogspot.com/2014/04/blog-post_27.html இந்தப் பாடலை நேரம் கிடைக்கும்போது படித்து தங்களின் கருத்தினைப் பகிர வேண்டுகிறேன்! நன்றி!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வருகை புாிந்தீர்! வளர்தமிழ் உண்டீர்!
      இரு..கை குவித்தேன் இனித்து!

      Supprimer
  16. அருமை ஐயா...

    -அன்புடன்-
    S. முகம்மது நவ்சின் கான்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இன்றுதான் இங்கே எழுந்துள்ளீா் எண்ணுகிறேன்!
      நன்றி..நான் சொன்னேன் நயந்து!

      Supprimer