mardi 19 août 2014

உணவும் பெயரும்உண்ணும் உணவும்  உயர்தமிழ்ப் பெயரும்


அல்வா            : களினி, தேம்பசை, இன்களி, தீம்பசை
கேசரி              : செழும்பம், பழும்பம்
வரிக்கை (பொரை)  : வறக்கை
புரூட் சூசு          : பழச்சாறு, கனிச்சாறு,
குருமா             : கூட்டாணம்
சப்பாத்தி           : கோந்தடை
பச்சி               : தோய்ச்சி, மாவேச்சி
பிரட் (ரொட்டி)      : மெத்தப்பம், செவப்பம்
புரோட்டா          : புரியடை
கூல்டிரிங்சு         : குளிர்குடிப்பு தண்குடிப்பு
சாம்பார்            : பருப்புக்குழம்பு, மென்குழம்பு
நூடுல்சு            : இழைமா
ரச்க்               : வறைச்சில்
ஐசு                : பனிகம்
ஐசுகிரீம்            : பனிக்குழைவு, பனிப்பாகு
கோன் ஐசுகிரீம்     : கூம்புப் பனிப்பாகு
சோடா             : காலகம், உப்பகம்,
கிச்சடி             : காய்ச்சோறு, காய்மா
சட்னி              : அரைப்பம், துவையல்
சாங்கிரி (சிலேபி)   : முறுக்கினி
ரோசு மில்க்        : முளரிப்பால், செம்பனிப்பால்
கேக்               : கட்டிகை,
சமுதா             : கறிப்பொதி,
பாயசம்            : பாற்கன்னல், கண்ணமுது
பிஸ்கட்            : ஈரட்டி, மாச்சில், முறுவட்டி
போண்டா          : உழுந்தை
பஃப்               : புடைச்சி
பன்                : மெதுவன்
லட்டு              : கோளினி
கலர்               : வண்ணீர்
காபி               : குளம்பி
புரூட் சாலட்       : பழக்கூட்டு, கனிக்கணம்
புரூட் ஐசு          : கனிச்சாறு
டீ                  : தேநீர்
ஆம்லெட்          : முட்டையடை
குலோப் சாம்       : தேங்கோளி
குளுக்கோசு        : மாச் சக்கரை
சாக்லெட்           : பழுப்பினியம், காவிக்கண்டு, கருங்காவிக் கண்டு
சிவிங்கம்          : சவைப்பயின், தீஞ்சுவை
ரைசு               : அரிசி
சாம்               : பாகு

(தனித்தமிழ்ச் சொற்களை அறிந்துகொள்ள
மொழியறிஞர் ப. அருளி படைத்த
"இவை தமிழல்ல" என்ற அகராதியைக் கற்குமாறு வேண்டுகிறேன்.

மொழியறிஞர் ப. அருளி
தனித்தமிழ் மனை
காளிக்கோயில் தெரு
தமிழூர்
புதுச்சேரி - 605 009

28 commentaires:

 1. வணக்கம் ஐயா!

  தின்பண்டம் இப்போது தேன்சுவை கொண்டதையா!
  என்னவென நான்கூற இங்கு!

  மிக மிக அருமையானதொரு பதிவு!
  பல உணவுப் பதார்த்தங்களின் தமிழ்ச் சொற்கள்
  இன்று தெரிந்து கொண்டோம்.
  சில சொற்கள் நாம் அறிந்திருந்தும் உபயோகிப்பதில்லை.

  பகிர்வினுக்கு நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   எங்கும் எதிலும் எழில்தமிழ் பொங்கினால்
   தங்கும் இனிமை தழைத்து!

   Supprimer
 2. மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   எழுத்திலும் பேச்சிலும் இன்றமிழ் ஓங்கப்
   பழுத்திடும் நம்மினப் பற்று!

   Supprimer

 3. பிறமொழி பேணிப் பெருந்தமிழைக் கொன்றால்
  உறவழிந் திங்(கு)ஒழிவாய்! உண்மை! - அறவழி
  நீங்கி அலைபவா் நெஞ்சுள் இருள்கவ்வும்!
  தாங்கித் தாிப்பாய் தமிழ்!

  RépondreSupprimer
  Réponses
  1. வணக்கம்!

   தாய்த்தமிழ்ப் பற்றிருந்தால் தங்கத் தமிழனின்
   வாய்..தமிழைத் தானே வழங்கிடுமே! - சேய்களுக்குச்
   சூடும் பெயாில் தமிழில்லை! துாள்அளவும்
   சூடுடில்லை! ஓங்கும் துயர்!

   Supprimer
 4. உலகெங்கும் தூயதமிழ் பேண
  சிறந்த வழிகாட்டல் பதிவு
  தொடருங்கள்

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   நம்மவர் வாழ்வில் நறுந்தமிழ் இல்லையே!
   எம்முயிர் ஏங்கும் இளைத்து!

   Supprimer
 5. தமிழில் நான் எந்த நிலையில் இருக்கிறேன்...பெரும்பாலான பெயர்கள் புதிது புதிது புதிது

  நலமாக இருக்கிறீர்களா ஐயா

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   நலமாய் இருக்கிறது! நற்றமிழ் பாடி
   வளமாய் இனிக்கிறது வாழ்வு!

   Supprimer
 6. அறியாதன அறிந்தேன்
  நன்றி ஐயா
  தம 7

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   மெல்லத் தனித்தமிழைச் சொல்லி மகிழ்ந்திடுக!
   இல்லம் மணக்கும் இனி!

   Supprimer
 7. Réponses

  1. வணக்கம்!

   துாயதமிழ் ஓங்கத் தொடா்ந்து செயற்பட்டால்
   தீயவை ஓடும் திரண்டு!

   Supprimer
 8. வணக்கம்
  ஐயா
  அறியாத சொற்கள் அறியத்தந்தமைக்கு நன்றிகள் பல

  என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: வடிந்து உருகும் தாயுள்ளம்:

  த.ம-8வதுவாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   பாவாணர் சொன்ன வழிகளை பற்றினால்
   நாவாணர் ஆகலாம் நாம்!

   Supprimer
 9. பயன் தரும் பதிவு!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   அயன்மொழி நீக்கி அளிக்கின்ற ஆக்கம்
   பயன்தரும் என்றே பகர்!

   Supprimer
 10. தனித் தமிழ் பெயர்களை அறிந்துகொண்டேன்! பகிர்வுக்கு நன்றி!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   மறைமலை மீண்டும் வரவேண்டும்! நம்மின்
   குறைநிலை போகும் குலைந்து

   Supprimer
 11. சமையல் பெயர்கள் தந்தீர் நன்று
  சாலச்சிறந்த உதவி தமிழுக்கு நன்று.

  RépondreSupprimer
  Réponses


  1. வணக்கம்!

   உமையொரு பாகன் உயரொளி யாக
   அமையுமுன் சொற்கள் அடா்ந்து!

   Supprimer
 12. Réponses

  1. வணக்கம்!

   முத்துபோல் மின்னிடக் கொத்துபோல் பூத்திட
   வாக்கை அளித்தீா் மகிழ்ந்து!

   Supprimer
 13. வணக்கம் கவிஞரையா!

  சாப்பாட்டில் கைவைத்தீர்களே...:)
  சட்டென நினைவுக்கு வரட்டுமென்றோ..:)
  அருமை! இன்னும் இன்னும் தாருங்கள்.
  குறித்துக் கொள்வோம்!

  வாழ்த்துக்கள் ஐயா!

  RépondreSupprimer

 14. வணக்கம்!

  சொல்லும் மொழியிலும் செல்லும் வழியிலும்
  வெல்லும் தமிழை விளை!

  RépondreSupprimer
 15. புசிக்கும் உணவின் தமிழ் பெயர்கள் அறிவுப்
  பசியைத் தூண்டியதே!

  RépondreSupprimer
 16. விருந்துண்ணும் போதும் விழியிலே நாளும்
  வரும்சொல் இதுவாய் வளரும் - அருஞ்சொல்
  இசைத்தால் அனுதினம் இன்பம் ! அறிவோம்
  திசைச்சொல் துரத்தும் வழி !

  அறியாத பல சொற்கள் அறிந்தேன் ஐயா நன்றி
  இன்றுமுதல் முயல்கிறேன் இத்தமிழ் வார்த்தைகளை நானும்

  வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  RépondreSupprimer