வணக்கம்
.
பாவலர் பயிலரங்கம் நடத்தும் விருத்தம் ஆயிரம் எழுதும் கவிவளப் பயிற்சியில் முதலிடத்தில் வெற்றி பெற்ற பாவலர் நகுலா சிவநாதன் அவர்களுக்குப் பாவலர்மணி பட்டம் வழங்குகிறோம்.
.
சீர்மைச் செந்தமிழின் செய்யுள் கலைபயின்று
கூர்மை விருத்தம் குவித்தார்! - நேர்மையுடை
நற்பா மணியார் நகுலா சிவநாதர்
பொற்பாப் புலமையால் பூத்து!
.
பாவலர்மணி பட்டம் பெற்ற நகுலா நவநாதன் அவர்களுக்குப் பாவலர் பயிலரங்கம் சார்பாக வெண்பா மாலை சாத்த விரும்புகிறேன். பாவலர் பயிலரங்க உறவுகள் ஓர் வெண்பா பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
பாலவர் பயிலரங்கம் பிரான்சு
08.11.2023
Aucun commentaire:
Enregistrer un commentaire