vendredi 3 novembre 2023

பாவலர் எம்.ஆர் செயந்தி

 


பாவலர் பயிலரங்க உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

.

பாவலர் பயிலரங்கம் நடத்தும் விருத்தமாயிரம் எழுதும் கவிவளப் பயிற்சியில் ஐந்நுாறு விருத்தங்கள் பாடித் தொடர்கின்ற திருமிகு  எம்.ஆர்.செயந்தி அவர்களுக்குப் பாவலர் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கிறோம்.

.

எழின்மிகு வண்ணத்தில் எம்.ஆர். செயந்தி

பொழின்மிகு பாக்கள் புனைந்தார்! - மொழிமிகு

பற்றால் பெறுகின்றார் பாவலர் பட்டமே!

நற்றாய் அளித்த நலம்!

 

பாவலர் பட்டம் பெற்ற திருமதி எம்.ஆர். செயந்தி அவர்களுக்குப் பாவலர் பயிலரங்க உறவுகள் விருத்தப்பாவில் ஒரு பக்க வாழ்த்து கவிதை  பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

.

திருவள்ளுவர் ஆண்டு 2054/இரட்டை[ஆனி] 29

14.07.2023

.

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம் பிரான்சு

 

Aucun commentaire:

Enregistrer un commentaire