dimanche 5 novembre 2023

பாவலர்மணி இராம. மீனாட்சி சுந்தரம்



பாவலர் பயிலரங்கம் நடத்தும் விருத்தம் ஆயிரம் எழுதும் கவிவளப் பயிற்சியில் முதலிடத்தில் வெற்றி பெற்ற பாவலர் இராம. மீனாட்சி சுந்தரம் அவர்களுக்குப் பாவலர்மணி பட்டம் வழங்குகிறோம்.

 

வெல்லும் இராமன்சீர் மீனாட்சி சுந்தரனார்

சொல்லும் படி..கவி சூடினார்! - செல்லுமிடம்

எங்கும் சிறப்புறுக! இன்பா வளா்மணியாய்ப்

பொங்கும் புகழுறுக பூத்து!

 

பாவலர்மணி பட்டம் பெற்ற இராம. மீனாட்சி சுந்தரனார் அவர்களுக்குப் பாவலர் பயிலரங்கம் சார்பாக வெண்பா மாலை சாத்த விரும்புகிறேன்.  பாவலர் பயிலரங்க உறவுகள் ஓர் வெண்பா பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம்  பிரான்சு

05.11.2023

 

Aucun commentaire:

Enregistrer un commentaire