பாவலர் பயிலரங்க உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
.
பாவலர் பயிலரங்கம் நடத்தும் விருத்தமாயிரம் எழுதும் கவிவளப் பயிற்சியில் விருத்தங்கள் பாடித் தொடர்கின்ற திருமதி நிசாந்தினி பரமேசுவரன் அவர்களுக்குப் பாவலர் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கிறோம்.
.
பாடும் பயிலரங்கில் பாவலர் பட்டத்தைச்
சூடும் நிசாந்தினியார்! துாயமலர் - நாடும்
சுரும்பாய்த் தமிழ்குடித்தார்! துய்த்துவக்கத் தந்தார்
கருப்பாய் இனிக்கும் கவி!
.
பாவலர் பட்டம் பெற்ற திருமதி நிசாந்தினி பரமேசுவரன் அவர்களுக்குப் பாவலர் பயிலரங்க உறவுகள் விருத்தப்பாவில் ஒரு பக்க வாழ்த்து கவிதை பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
.
திருவள்ளுவர் ஆண்டு 2054/இரட்டை[ஆனி] 29
14.07.2023
.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
பாலவர் பயிலரங்கம் பிரான்சு
Aucun commentaire:
Enregistrer un commentaire