samedi 18 janvier 2020

இயற்றமிழ்ப் பொங்கல்



திருவள்ளுவர் ஆண்டு 2051 தைத்திங்கள் 4
18.01.2020
  
இயற்றமிழ்ப் பொங்கல் பொங்குகவே!
  
ஏடு மணக்கும் இயற்றமிழை
   ஏந்தும் பொங்கல் வாழியவே!
பீடு மணக்கும் நன்னுாலும்,
   பெருமை மணக்கும் நல்லுரையும்,
நாடு மணக்கும் நலஞ்சூட்டும்!
   நன்மை மணக்கும் வழிகாட்டும்!
வீடு மணக்கும் வண்ணத்தில்
   விளித்துப் பொங்கல் பொங்குகவே!
  
ஈடு மணக்கும் சொல்யாவும்
   இனிமை மணக்கும் கற்றிடுவீர்!
நீடு மணக்கும் நன்னெறியால்
   நெஞ்சு மணக்கும்! எந்நாளும்
மேடு மணக்கும் சான்றோரை
   மேவி மணக்கும் செயல்வாழ்க!
காடு மணக்கும் வண்ணத்தில்
   கமழும் பொங்கல் பொங்குகவே!
  
ஈடு - திருவாய்மொழி உரைநுால்
மேடு - பெருமை
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்,
கம்பன் கழகம், பிரான்சு,
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

1 commentaire: