வெண்பா மேடை - 83
ஒற்றிலா வெண்பா
என்னவளே!
பொழிலே! புதுவுலகே! போதை மதுவே!
எழிலே! இளமிசையே! ஏனோ - வழியறியா
வாடுமெனை ஆற வகையெழுது! ஓவியமே!
ஆடுமெனை ஆர அணை!
மாயவனே!
வாவாவா வானமுதே! மாயவனே! மாதவனே!
தாதாதா ஏறே! தமிழழகே! - ஆகாகா
பாடுகவே! ஓதுகவே! பாரருளே! சீருறவே
சூடுகவே தேவா சுவை!
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
ஒற்றேழுத்தே இல்லாத நேரிசை வெண்பா ஒன்றை விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து ஒற்றிலா வெண்பாத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
20.07.2018
Aucun commentaire:
Enregistrer un commentaire