vendredi 16 novembre 2012

கம்பன் கவியரங்கம் [ பகுதி - 3 ]



கம்பன் அணிந்த அணி 
(தமிழ் - மானம் - மாண்பு - புகழ்)
(தலைமைக் கவிதை)

நிறைவு கவிதை

கனிகின்ற கனியெல்லாம் இனிமை யாமோ?
     கண்கவர் மலரெல்லாம் மணக்கு மாமோ?
இணைகின்ற நபரெல்லாம் நண்ப ராமோ?
     இதயங்கள் ஒன்றாதார் இணைய ராமோ?
குனிகின்ற பணிவெல்லாம் உண்மை யாமே?
     கொஞ்சுகின்ற இன்பத்தார் துறவி யாமோ?
அணிகின்ற அணியெல்லாம் நிலைக்கு மாமோ?
     அழியாமல் நின்றொளிரும் அணிகள் உண்டோ?

அன்பென்னும் அணியணிந்தால் அமிழ்தம் ஊறும்!
     அருளென்னும் அணியணிந்தால் அமைதி கூறும்!
பண்பென்னும் அணியணிந்தால் பாதை ஓங்கும்!
     படிப்பென்னும் அணியணிந்தால் துன்பம் நீங்கும்!
தொண்டென்னும் அணியணிந்தால் தூய்மை மின்னும்!
     தொன்மைமிகு குறளணிந்தால் வாய்மை மின்னும்!
இன்பென்னும் செந்தமிழை அணிந்த கம்பன்
     இவ்வுலகம் உள்ளவரை இருப்பான் நன்றே!

                                            தொடரும்

3 commentaires:

  1. பாடப் புத்தகத்தில்தான் கம்பராமாயணம் பற்றி கொஞ்சம் படித்திருக்கிறோம். தற்போது முழுமையாக படிக்க ஆறாம் ஏற்படுகிறது. தங்கள் பாடல்களால். கவிதை நன்று. தொடர்ந்து காத்திருக்கிறேன்.

    RépondreSupprimer
  2. மிகவும் பிடித்த வரிகள் :

    /// அன்பென்னும் அணியணிந்தால் அமிழ்தம் ஊறும்!
    அருளென்னும் அணியணிந்தால் அமைதி கூறும்! ///

    நிறைவு கவிதை நிறைவான கவிதை ஐயா...

    வாழ்த்துக்கள்...
    த.ம. 1

    RépondreSupprimer
  3. கனிகின்ற கனியெல்லாம் இனிமை யாமோ?
    கண்கவர் மலரெல்லாம் மணக்கு மாமோ?
    இணைகின்ற நபரெல்லாம் நண்ப ராமோ?
    இதயங்கள் ஒன்றாதார் இணைய ராமோ?
    குனிகின்ற பணிவெல்லாம் உண்மை யாமே?
    கொஞ்சுகின்ற இன்பத்தார் துறவி யாமோ?
    அணிகின்ற அணியெல்லாம் நிலைக்கு மாமோ?
    அழியாமல் நின்றொளிரும் அணிகள் உண்டோ?

    மனதை கட்டிப்போட்ட வரிகள். நன்றி. வாழ்த்துகள்.

    RépondreSupprimer