mardi 28 août 2012

காதல் பெருகுதடி



காதல் பெருகுதடி!
கம்பன் கவியழகில் - தமிழ்க்
                                                            (காதல்)

நாதன் வில்லழகில்
நறுந்தேன் சொல்லழகில் - உயிர்க்
                                                            (காதல்)

மோதல் விழியழகில்
மோக மொழியழகில் - உயர்
                                                            (காதல்)

ஈதல் கொடையழகில்
சீதை நடையழகில் - வளர்
                                                            (காதல்)

ஒவ்வொரு நாளும் அவன்கவிதைஎன்
உயிரினில் ஊட்டும் தமிழமுதை!
எவ்வகை இன்பம் தரும்உவமை - இன்ப
ஈடிலாத் தமிழின் தனிப்பெருமை!
                                                            (காதல்)

என்மன வீட்டில் குடிபுகுந்தான் - சந்த
இன்கவி எழுதப் படியளந்தான்!
நன்மன இராமன் எழில்புனைந்தான் - கம்பன்
பொன்மழை பொழிந்து புகழடைந்தான்
                                                            (காதல்)

அண்ணலும் அவளும் நோக்கியதால் - காதல்
மின்னலும் வந்து தாக்கியதால்
எண்ணிட ஏக்கம் ஊக்கியதால் - ஈருயிர்
ஒன்றிட இன்பம் தேக்கியதால்
                                                            (காதல்)

2 commentaires:


  1. காதல் பெருகுதடி கன்னல் கவிபடித்துக்
    காதல் பெருகுதடி கண்மணியே! - ஓதுகின்ற
    வாய்மணக்கும்! வாழ்வின் வளம்மணக்கும்! வண்டமிழ்த்
    தாய்மணக்கும் என்றுணர்ந்து சாற்று!

    RépondreSupprimer

  2. வணக்கம்!

    என்மனம் வாழும் இனியதமிழ்க் கம்பனை
    இன்மனம் ஏந்தி இசைத்துள்ளேன்! - பொன்மனம்
    மேவும்! புலமை விளைந்தோங்கும்! எந்நொடியும
    கூவும் கவிதைக் குயில்

    RépondreSupprimer