samedi 15 juillet 2023

பாவலர் செகவான்

 


பாவலர் பயிலரங்க உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

.

பாவலர் பயிலரங்கம் நடத்தும் விருத்தமாயிரம் எழுதும் கவிவளப் பயிற்சியில் ஐந்நுாறு விருத்தங்கள் பாடித் தொடர்கின்ற திருமிகு செகவான் அவர்களுக்குப் பாவலர் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கிறோம்.

.

கன்னலெனப் பாடும் கவிஞர் செகவானார்

மின்னலெனத் தந்தார் விருத்தங்கள்! - இன்பமெனப்

பாவலர் பட்டம் படைத்திட்டேன்! பைந்தமிழின்

காவலர் வாழ்க களித்து!

.

பாவலர் பட்டம் பெற்ற திருமிகு செகவான் அவர்களுக்குப் பாவலர் பயிலரங்க உறவுகள் விருத்தப்பாவில் ஒரு பக்க வாழ்த்து கவிதை  பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

.

திருவள்ளுவர் ஆண்டு 2054/இரட்டை[ஆனி] 29

14.07.2023

.

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம் பிரான்சு

 

பாவலர் செ. அன்புராசா

 


பாவலர் பயிலரங்க உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

.

பாவலர் பயிலரங்கம் நடத்தும் விருத்தமாயிரம் எழுதும் கவிவளப் பயிற்சியில் ஐந்நுாறு விருத்தங்கள் பாடித் தொடர்கின்ற திருமிகு செ. அன்புராசா அவர்களுக்குப் பாவலர் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கிறோம்.

.

சீர்மணக்கும் பாவலர் செ.அன்பு ராசா!தன்

பேர்மணக்கும்! கன்னல் பிழிவளிக்கும்! - பார்மணக்கும்

பாக்களைக் கண்டரும் பட்டம் படைத்திட்டேன்

பூக்களை வாரிப் பொழிந்து!

.

பாவலர் பட்டம் பெற்ற திருமிகு செ. அன்புராசா அவர்களுக்குப் பாவலர் பயிலரங்க உறவுகள் விருத்தப்பாவில் ஒரு பக்க வாழ்த்து கவிதை  பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

.

திருவள்ளுவர் ஆண்டு 2054/இரட்டை[ஆனி] 29

14.07.2023

.

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம் பிரான்சு

 

 

 

vendredi 14 juillet 2023

பாவலர் வில்லுார்ப் பாரதி

 


பாவலர் பயிலரங்க உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

.

பாவலர் பயிலரங்கம் நடத்தும் விருத்தமாயிரம் எழுதும் கவிவளப் பயிற்சியில் ஐந்நுாறு விருத்தங்கள் பாடித் தொடர்கின்ற திருமிகு வில்லுார்ப் பாரதி அவர்களுக்குப் பாவலர் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கிறோம்.

.

நல்லுார் முருகனின் நற்பேறால் பாவலராய்

வில்லுார்ப் பாரதியார் மிக்குயர்ந்தார்! - வெல்லும்   

உளத்துடன் வாழ்க! உயா்தமிழ்த் தாயின்

வளத்துடன் வாழ்க மகிழ்ந்து!

.

பாவலர் பட்டம் பெற்ற திருமிகு வில்லுார்ப் பாரதி அவர்களுக்குப் பாவலர் பயிலரங்க உறவுகள் விருத்தப்பாவில் ஒரு பக்க வாழ்த்து கவிதை  பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

.

திருவள்ளுவர் ஆண்டு 2054/இரட்டை[ஆனி] 29

14.07.2023

.

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம் பிரான்சு

பாவலர் நா. பாண்டிய ராசன்

 


பாவலர் பயிலரங்க உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
.
பாவலர் பயிலரங்கம் நடத்தும் விருத்தமாயிரம் எழுதும் கவிவளப் பயிற்சியில் ஐந்நுாறு விருத்தங்கள் பாடித் தொடர்கின்ற திருமிகு நா. பாண்டியராசன் அவர்களுக்குப் பாவலர் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கிறோம்.
.
பாவலர் மன்றில்,நா. பாண்டிய ராசனார்
காவளம் மிக்க கவிபடைத்தார்! - நாவலர்
பாடிடவே பாவலர் பட்டம் அளித்தேன்!சீர்
சூடிடவே வேண்டும் தொடர்ந்து!
.
பாவலர் பட்டம் பெற்ற திருமிகு நா. பாண்டியராசன் அவர்களுக்குப் பாவலர் பயிலரங்க உறவுகள் விருத்தப்பாவில் ஒரு பக்க வாழ்த்து கவிதை பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
.
திருவள்ளுவர் ஆண்டு 2054/இரட்டை[ஆனி] 29
14.07.2023
.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
பாலவர் பயிலரங்கம் பிரான்சு

samedi 1 juillet 2023

பாவலர்மணி நெய்தல் நாடன்

 


பாவலர்மணி நெய்தல் நாடன்

பிறந்தநாள் வாழ்த்து!

 

நன்னெறிப் பாக்கள் பாடும்

........நற்றமிழ் நெய்தல் நாடன்

பொன்னெறி ஈழ நாட்டில்

........பொலிவுடன் பிறந்த நன்னாள்

இன்னெறி சூடி வாழ்க!

........இனனலம் மேவி வாழ்க!

மின்னெறி கோடி யேந்தி

........மேதினி போற்ற வாழ்க!

 

பற்றுடன் மொழியைப் பேணும்

........பண்புடை நெய்தல் நாடன்

பொற்புடன் பணிகள் ஆற்றப்

........புவியினில் பிறந்த நன்னாள்

வற்புடன் ஓங்கி வாழ்க!

........வளர்புகழ் தாங்கி வாழ்க!

வெற்புடன் ஆண்ட சீர்போல்

........வெற்றியைக் குவித்து வாழ்க!

 

போர்க்களக் குடியில் வந்த

........புலிக்கொடி நெய்தல் நாடன்

சீர்க்களம் யாவுங் காணச்

........செகத்தினிற் பிறந்த நன்னாள்

ஏர்க்களப் பசுமை காண்க!

........எண்டிசைப் புதுமை காண்க!

தார்க்களத் தமிழைத் தம்மின்

........தலைக்களம் அணிந்து வாழ்க!

 

கற்றவர் களிக்கும் வண்ணம்

........கமழ்ந்திடும் நெய்தல் நாடன்

பெற்றவர் களிக்கும் வண்ணம்

........பெயர்பெறப் பிறந்த நன்னாள்

உற்றவர் களிக்க வாழ்க!

........உறவுகள் திளைக்க வாழ்க!

நற்றவச் சீர்கள் காத்து

........நானிலம் போற்ற வாழ்க!

 

ஈழமே உயிரா யெண்ணி

........இயங்கிடும் நெய்தல் நாடன்

வேழமே கொண்ட வன்மை

........விளைந்திடப் பிறந்த நன்னாள்

அழுமே எழுத்தில் காண்க!

........அமுதமே படைப்பில் காண்க!

சோழனே நெஞ்சுள் கொண்டு

........தொடர்பணி புரிந்து வாழ்க!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம், பிரான்சு

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

01.07.2023