lundi 14 janvier 2019

போகி நன்னாள் வாழ்த்து!


வணக்கம்!
  
போகி நன்னாள் வாழ்த்து!
  
எங்கும் முழங்கிடுவோம் இன்பத் தமிழ்மொழியை!
தங்கும் நலமிடுவோம் சால்புடனே! - பொங்கும்
நெருப்பிட்டுக் கூத்திடுவோம்! நெஞ்சம் ஒளிரும்
கருத்திட்டுப் பூத்திடுவோம் காத்து!
  
சன்மார்க்கம் கண்டிடவும், தங்கத் தமிழ்நெறியின்
பொன்மார்க்கம் கொண்டிடவும், பூவுலகே - நன்மார்க்கம்
ஆகி நடந்திடவும், அன்பமுதை எந்நாளும்
போகி ஒளிநாளே பொங்கு!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
14.01.2019

1 commentaire:

  1. ஒரே ஒரு வார்த்தை
    அற்புதம்
    தமிழின் இனிமையை உணர்த்த உங்களைப் போன்ற பாட்டரசர்கள் தேவை.

    வாய்விட்டுப் படித்து மகிழ்ந்தேன்

    RépondreSupprimer