dimanche 6 juillet 2014

சிறப்புரை

 



சயாம் - பர்மா மரணரயில் பாதை

ஆவணப்படம்

மறைத்திட்ட வரலாறை நன்றே ஆய்ந்து
     வடித்திட்டார் நம்குறிஞ்சி வேந்தன்! மண்ணில்
கறைப்பட்ட பக்கங்கள்! கண்கள் கொண்ட
     கரையிரண்டும் உடைந்தனவே! ஐயோ! ஐயோ!
சிறைப்பட்ட கைதிகளைத், தமிழர் தம்மைச்
     சிந்திக்க இயலாத கொடுமை செய்தார்!
முறையற்ற புண்செயலைச் சப்பான் செய்து
     முடிவற்ற பாவத்தைச் சுமந்த தென்பேன்!

06.07.2014

21 commentaires:

  1. வணக்கம்
    ஐயா.

    ஆவணப்பட நிகழ்வுக்கு தங்களின்சிறப்புரை ஒரு மகுடம் ஐயா.
    நிகழ்வு சிறப்புற எனது வாழ்த்துக்கள்

    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கொடுமை நிகழ்வை வெளிக்கொணா்ந்தார்! பொல்லா
      நெடுமைத் துயாினை நெய்து!

      Supprimer
  2. சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      பேச இயலாப் பெருங்கொடுமைக் காட்சிகள்!
      வீசும் துயரை விரித்து!

      Supprimer
  3. வணக்கம் ஐயா!

    சிறப்புரை தன்னைத் திரட்டிய பாடல்
    திறந்ததே காட்சியாச் சேர்ந்து!

    காணொளியின் கனம் விருத்தமாய்க் கண்டேன்!

    நல்லதொரு விருத்தப் பா!
    நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சிறப்புரைக்குச் சென்றேன்! இருகண் சிவக்கக்
      கறுப்புரை தந்தேன் கனத்து!

      Supprimer
  4. நிகழ்வு சிறப்புற எனது வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அாிய படத்தொகுப்பு! சுற்றும் உலகம்
      தொியா விடயம் தெளி!

      Supprimer
  5. வணக்கம் ஐயா!

    அரிதான இக் காணொளி விபரம் அறிந்தோம் இன்று!
    எங்களுக்கும் இக் காணொளியைக் காண ஆவலாயுள்ளது.
    யாரைத் தொடர்பு கொண்டு அறிவது?..

    விபரம் தாருங்கள் ஐயா!

    மிக்க நன்றி! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சப்பான் மறைத்த கொடுமையைச் சாற்றுமே
      இப்பாா் உணர எடுத்து!

      Supprimer
  6. சிறப்புற என் வாழ்த்துக்கள் ..!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      காலம் மறைத்திட்ட கண்ணீா்க் கதைதரும்
      ஓலக் குரலை உணா்!

      Supprimer
  7. விழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா....

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      என்னென்று உரைப்பேன்! இதயம் இழந்திட்டேன்!
      மன்னும் துயரோ மலை!

      Supprimer
  8. சயாம் பர்மா மரண ரயில் பாதை
    மறக்கக் கூடிய நிகழ்வா-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மரண இரயில் வழியில் நடந்த
      வரலாறு காட்டும் வதை!

      Supprimer
  9. விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள் ஐயா !
    தம 11

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இதுபோன்ற காட்சிகளை ஏன்கண்டேன்? துன்பம்
      எதுவரை? அய்யோ எனக்கு!

      Supprimer

  10. அன்று நடந்த அழிவை அவணமாய்
    இன்று தொகுத்தார்! இணையிலா - வன்முயற்சி
    நண்பா் நறுங்குறிஞ்சி வேந்தனின் நற்பணியைக்
    கொண்டாடும் காலம் கொழித்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வல்லரசு என்று வளர்ந்திட வேண்டியே
      கொல்லரசு ஆன கொடுங்கதை! - தொல்லுலகை
      ஆள நினைத்தே அழிந்திட்ட சப்பானை
      நாளும் நினைத்திட நன்று!

      Supprimer