samedi 5 octobre 2013

அறிவொளி




அறிவொளி

அன்னையாம் தமிழைப் போற்றிட வேண்டும்
அறிவொளிச் சுடரை ஏற்றிட வேண்டும்
கண்ணென நாட்டைக் காத்திட வேண்டும்
கயவரை மாய்த்துக் கூத்திட வேண்டும்!

உண்மையாம் நெறியில் நடந்திட வேண்டும்
உழைப்பவர் உயர்வை அடைந்திட வேண்டும்
பெண்மையை நாளும் மதித்திட வேண்டும்
பெயரினைப் பாரில் பதித்திட வேண்டும்!

சாதிகள் யாவும் அழிந்திட வேண்டும்
சமத்துவம் எங்கும் பொழிந்திட வேண்டும்
நீதியே நிலத்தில் நிலைத்திட வேண்டும்
நேர்மையை வாழ்வில் விளைத்திட வேண்டும்!

05.05.1999

7 commentaires:

  1. வணக்கம்
    ஐயா

    சாதிகள் யாவும் அழிந்திட வேண்டும்
    சமத்துவம் எங்கும் பொழிந்திட வேண்டும்
    கவிதை அருமை வரிகளும் அருமை வாழ்த்துக்கள் ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  2. சாதிகள் யாவும் அழிந்திட வேண்டும்
    சமத்துவம் எங்கும் பொழிந்திட வேண்டும்
    நீதியே நிலத்தில் நிலைத்திட வேண்டும்
    நேர்மையை வாழ்வில் விளைத்திட வேண்டும்!

    அறிவொளி ஏற்றும் தீபங்களாய் அருமையான வரிகள்..!

    RépondreSupprimer
  3. ஆஹா அருமை! யாவரும் அத்தனை "ட" வும் கடைபிடித்தால் அருமையான உலகம் கண்டிடலாம்.

    உம் பெயரினை பாரினில் பதித்திட்டீர்.
    கவிதையை எம் மனதினில் விதைத்திட்டீர்.

    RépondreSupprimer
  4. தாங்கள் சொல்லியிருக்கும் எல்லாம் வேண்டும்...
    அருமையான கவிதை.

    RépondreSupprimer
  5. எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!
    என்றே முழங்கிடக் கேட்டுவோம்!
    இன்னல் இனியிலை இங்கு நீருளீர்
    என்றே நாங்கள் ஆடிடுவோம்!

    ஐயா.. நீங்கள் எம்மோடிருக்க எம் அனைக்கு அரண் வேறொன்றும் வேண்டாம்!

    அருமையான அழகு கவிதை ஐயா!

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!

    RépondreSupprimer
  6. அறிவொளி சொல்லும் வரிகள்
    அகத்திலே படிந்து போக
    நிறைமொழியாம் உம் கவியை
    நித்திலம் போற்றும் என்றும் ...!

    அழகிய கவிதை வாழ்த்துக்கள் கவிஞரே

    வாழ்கவளமுடன்
    த ம 4

    RépondreSupprimer
  7. தங்கள் வேண்டுதல்கள் அனைத்தும்
    நிறைவேறக் கூடுமாயின் நிச்சயம்
    மண்ணில் வானம் தெரியும் தானே
    மனம் தொட்டப் பதிவு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    RépondreSupprimer