vendredi 18 octobre 2013

என்னுள் வாழும் திருமாலே




என்னுள் வாழும் திருமாலே

நல்லார் தம்மின் நட்புறவை
     நாளும் பெறவே வேண்டுகிறேன்!
வல்லார் தம்மின் கூட்டுறவை
     வாழ்வில் வளர்க்க வேண்டுகிறேன்!
பொல்லார் தம்மின் சந்திப்பைப்
     புவியில் நீக்க வேண்டுகிறேன்!
எல்லாம் வல்ல திருமாலே!
     என்னுள் இருந்து மகிழ்வாயே!

அல்லல் கலைத்துக் காத்திடுவாய்!
     அன்பாம் வழியைக் காட்டிடுவாய்!
கல்லா(து) இருக்கும் அடியேனைக்
     கற்றுத் தெளிய வைத்திடுவாய்!
முள்ளாய்க் குத்தும் முன்வினைகள்
     முற்றும் நீங்க அருள்புரிவாய்!
தொல்லை போக்கி வாழ்வுதனைத்
     துளங்கச் செய்வாய் திருமாலே!

3.5.1999


11 commentaires:

  1. வணக்கம்
    ஐயா
    முள்ளாய்க் குத்தும் முன்வினைகள்
    முற்றும் நீங்க அருள்புரிவாய்!
    தொல்லை போக்கி வாழ்வுதனைத்
    துளங்கச் செய்வாய் திருமாலே...

    பாமாலையின் சொல் வேந்தன் எங்கள் ஐயா உங்களின் ஒவ்வொரு பதிவுகளும் எங்களுக்கு ஒருவித புத்துணர்வை அளிக்குது திருமால் பற்றிய பதிவு அருமை வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  2. /// என்னுள் இருந்து மகிழ்வாயே... /// மனதை மகிழ வைக்கும் வரிகள் பல.... வாழ்த்துக்கள் ஐயா... நன்றிகள்...

    RépondreSupprimer
  3. நீண்ட இடைவேளைக்கு தங்களின் பதிவு கண்டும் மிகவும் மகிழ்ச்சி ஐயா... நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  4. எல்லாம் வல்ல இறைவன் அவன்
    என்றும் கூட இருந்திடுவான் பல்லாண்டு
    போற்றும் தமிழ் பாரில் வல்லார்
    கூற்றிது உமையும் காக்கும்!

    மிக அழகிய படமும் மனமுருக வேண்டும் அருமைக் கவியும் ஐயா!

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!

    RépondreSupprimer
  5. வணக்கம் ஐயா
    அருமையான வேண்டுதற் பா !! மனம் மகிழ்ந்தது இந்நேரம் .
    வாழ்த்துக்கள் மேலும் தொடருங்கள் ஐயா .

    RépondreSupprimer
  6. திருமாலுக்கு, பக்கம் பக்கமா எழுத வேண்டிய மனுவை, ஒரு பத்தியில அழகு தமிழால் அசத்திட்டீங்க. எனது வணக்கங்களும் வாழ்த்துக்களும்

    RépondreSupprimer
  7. திருமால் போற்றி அருமை! நன்றி!

    RépondreSupprimer
  8. அருமையான படம்.
    அழகான கவிதை.
    வாழ்த்துக்கள் ஐயா.

    RépondreSupprimer
  9. என்னுள் வாழும் திருமாலே!

    அருமையான பாடல் கவிஞரே!
    ஒவ்வொரு வரியும் உருகி உருகிப் பாடியிருக்கிறீங்க!

    வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  10. கல்லா(து) இருக்கும் அடியேனைக்
    கற்றுத் தெளிய வைத்திடுவாய்!//இன்னுமே நன்கு கட்டறுத் தெளிக

    RépondreSupprimer

  11. திருமலைச் செல்வன் திருவடியை நெஞ்சம்
    ஒருநிலை கொண்டே உணா்ந்தால் - பெருநிலை
    கிட்டும்! பிறவிக் கடல்நீந்தும்! கீழகற்றி
    வெட்டும் வினையை விரைந்து!

    RépondreSupprimer