mercredi 2 octobre 2013

மாமன்னன் காந்தி




மாமன்னன் காந்தி

முடியின்றி அணியின்றி ஆண்ட மன்னன்!
     முடிவில்லாப் பெரும்புகழைச் சேர்த்த மன்னன்!
விடிவின்றித் தம்மக்கள் வாழ்ந்த போது
     விடிவெள்ளி யாகவொளி தந்த மன்னன்!
வடிவின்றி ஆடையினை எளிமை யோடே
     அணிந்துலகில் மாண்புகளை அணிந்த மன்னன்!
வெடியின்றித் தடியின்றி வெற்றி சூடி
     மேன்மைதரும் உண்மைநெறி காத்த மன்னன்!

பொக்கைவாய்ப் புன்சிரிப்பும், கருணை நெஞ்சும்,
     புதையலெனப் பெற்றுலகில் பொலிந்த மன்னன்!
தக்கையாய்க் கிடந்திட்ட நம்மின் வாழ்வைத்
     தடையுடைத்து வழிபடைத்த வீர மன்னன்!
சக்கையாய்த் தாழ்ந்திட்ட கருப்பர் வாழ்க்கை
     சால்பெய்தப் போராடி உயர்ந்த மன்னன்!
மக்களின் மகிழ்வொன்றே மனத்திற் கொண்டு
     வளம்படைத்த மாமன்னன் காந்தி யாமே!

23-10-2002

12 commentaires:

  1. மாமன்ன்னவனுக்காக
    எங்கள் கவி மன்னனின்
    சிறப்புப் பதிவு சிந்தை கவர்ந்தது
    சந்தச் சிறப்பும் கருத்துச் செறிவும்
    எங்கள் சிற்றறிவுக்கு
    உரமும் இட்டது

    RépondreSupprimer
  2. மகாத்மாவாய் திகழும் மாமன்னன் காந்தி வாழ்க..!

    RépondreSupprimer
  3. சிறப்பான கவிதை ஐயா...

    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  4. பள்ளிக் குழந்தைகளிடம் ஒரு சுவாரஸ்யமான உரையாடல்...

    Link : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/If-you-are-a-BIRD.html

    RépondreSupprimer
  5. Superbe chanson

    subbu thatha.
    www.wallposterwallposter.blogspot.in

    RépondreSupprimer
  6. மாமன்னன் காந்தி.....

    சிறப்பான கவிதை. பாராட்டுகள்.

    RépondreSupprimer
  7. காந்திஜியின் புகழ் பாடல் நன்று.
    ஜெய் ஹிந்த் !

    RépondreSupprimer
  8. வணக்கம் ஐயா!..
    அண்ணல் காந்தி அடிகளின் நினைவுதினத்திலே
    அழகாய் மீண்டும் உங்கள் வலைப்பதிவு உதயம்...
    மனதிற்கு மகிழ்வாய் இருக்கின்றதையா மீண்டும் உங்கள் வரவு காண்கையில்..

    காந்தியடிகள்பற்றி அழகிய அற்புத வரிகள்!
    இன்னும் எங்கள் இதயங்களில் வாழ்கின்றார்!

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
  9. காந்தித்தாத்தாவோட கவிஞர் மீண்டும் வந்தது கண்டு மகிழ்ச்சியாயிருக்கு!..

    கவிதை ரொம்பவே நன்றாக இருக்கிறது.

    வலைத்தளமும் பிண்ணனி வர்ணம் புதுசா மாறியிருக்கு..:)

    அனைத்தும் அழகு.. வாழ்த்துக்கள்!.

    RépondreSupprimer
  10. ஆம்! அவர், மன்னர் மன்னன்! ஐயமில்லை! நலமா! வெண்பா வேந்தே!

    RépondreSupprimer
  11. முடியின்றி அணியின்றி ஆண்ட மன்னன்!
    தடையுடைத்து வழிபடைத்த வீர மன்னன்!

    சிறப்பான கவிதை. பாராட்டுகள்.

    RépondreSupprimer