பாவலர் நிறைமதி நீலமேகம் அவர்களின்
தாயும் தந்தையும் மண்மறைந்த செய்தியால்
கண்வழிந்த வெண்பா!
தந்தையும் தாயும் தரைவிட்டுச் சென்றனரே!
சிந்தையும் சேர்ந்து சிதைவுற்றோம் - நிந்தனை
ஏனோ இறைவா? இறைஞ்சுகிறோம் தந்தருள்வாய்
வானே வழங்கும் வழி!
ஈற்று நொடிவரை ஈடில் தமிழ்பேசிக்
காற்றில் கலந்த கருணையினர்! - போற்றிப்
தொழுதேன் திருக்கூத்தா! துாயவரை ஏற்க
அழுதேன் தருவாய் அருள்!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
பாவலர் பயிரங்க முகநுால் குழுமம்
11.02.2023
Aucun commentaire:
Enregistrer un commentaire