samedi 11 février 2023

கண்ணீர் வெண்பா

 


தனித்தமிழ்ப் பாவலர்

அறவாழி கி. சினிவாசன் அவர்களின்
தந்தையார் விண்ணடைந்த செய்தியால்
கண்வழிந்த வெண்பா!

 

மண்மறைந்த செய்தியால் கண்வழிந்த என்றமிழ்

விண்ணிறைந்த வேந்தனை வேண்டுமே! - நல்லார்

கிருட்டின சாமியார் கேண்மைக் குணத்தார்!

அருணிலை காண்பார் அவர்!

 

நல்ல நெறியில் நடைபோட்ட நெஞ்சத்தார்

வல்ல இறையடியில் வாழ்ந்திடுவார்! - வெல்லும்
திருநீறு நெற்றிக்குத் தில்லைச் சடையன்

அரும்பே[று] அளிப்பான் அறி!  

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாவலர் பயிரங்க முகநுால் குழுமம்

11.02.2023

Aucun commentaire:

Enregistrer un commentaire