lundi 1 janvier 2018

வெண்பா மேடை - 56




வெண்பா மேடை - 56

வெண்டளையால் வந்த குறள் வெண்செந்துறை

அளவில் ஒத்த இரண்டு அடிகளாய் ஒழுகிய ஓசையும் விழுமிய பொருளும் கொண்டு வருவது குறள் வெண்செந்துறை யாகும். [குறள் வெண்செந்துறையின் இலக்கணத்தை வெண்பா மேடை - 53 ல் காண்க]   வெண்பாவைப் போன்று குறள் வெண்செந்துறையும் வெண்டளை பெற்று வருவதுண்டு. [ இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை]

ஓமென்னும் மந்திரத்தை உள்ளம் உணர்ந்தொலித்[து]
உன்னடியைச் சூடிடவும்
நாமென்னும் சொல்லளித்து நானென்னும் சொல்லகற்றி
நாரணனே காத்திடுவாய்!

வெண்டளையால் அமைந்த குறள் வெண்செந்துறை ஓசை நயம் மிகுந்திருப்பதைப் பாடி உணரலாம்.

வெண்டளையால் வந்த குறள் வெண்செந்துறை ஒன்றை, விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்செந்துறையைத்  தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!

அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
01.01.2018


1 commentaire:

  1. ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    RépondreSupprimer