ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
ஒன்றே குலமென்றும், தேவன் ஒருவனென்றும்
நன்றே தமிழ்நெறியை நல்கிடுவாய்! - கன்றே..போல்
துள்ளிக் குதித்திடுவாய்! துய்யன்பைப் புத்தாண்டே!
அள்ளி அளித்திடுவாய் ஆழ்ந்து!
எல்லா நலமும் இணையட்டும்! என்னீசன்,
அல்லா, இயேசும் அருளட்டும்! - பல்லாண்டு
பாடிப் பசுமை படரட்டும்! வாழ்த்துகிறேன்
கோடி மலர்கள் கொடுத்து!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
வணக்கம் ஐயா!
RépondreSupprimerஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்க்கும் இனிய
ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
தங்களின் வெண்பா வாழ்த்து மிக அருமை! உளமார்ந்த நன்றி ஐயா!
ஆங்கிலப் புத்தாண்(டு) அழகாய் அமையட்டும்!
ஓங்கி உயரட்டும் நம்மொழி! - பாங்குறும்
பாக்கள் பயிற்றிடும் ஆசானே! போற்றுகின்றோம்!
ஊக்குவீரே எங்களை யும்!
வாழ்க வளமுடன்!
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
RépondreSupprimer