dimanche 16 août 2015

கம்பன் விழா வெளியீடு

26.09.2015 - 27-09.2015 ஆம் நாள்
பிரான்சு கம்பன் கழகம் நடத்தும் 
பதினான்காம் ஆண்டுக் கம்பன் விழாவில் வெளியிடப்படும் நுால்கள் 






14 commentaires:



  1. கோலத் தமிழ்ப்புதையல்! கொட்டும் கவிமழை!
    ஞாலம் புகழ்ந்தேத்தும் நன்னுால்கள்! - காலத்தை
    வென்று மணப்பன! மேன்மை மொழிமரபை
    என்றும் வளர்ப்பன ஏத்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பாட்டுப் பயிற்சி படிக்கின்ற மாணவர்க்கு
      ஊட்டும் உணவாய்ப் படைத்துள்ளேன்! - நாட்டமுடன்
      கற்றால் கவிதைக் கலைமணக்கும்! என்அன்னை
      பொற்றாள் அளித்த புகழ்!

      Supprimer
  2. வணக்கம் ஐயா!

    நன்நூல் வெளியீடு! நாம்கண்டோம் நற்பேறு!
    பொன்போல் இருக்கும் புதையல்கள்! - வென்றாழும்
    நம்தமிழ்ப் பாவேந்தர் நற்செயல்கள்! கொண்டாடும்
    இம்மண்ணும் என்றும் இணைந்து!

    இவ்வருடக் கம்பன் விழாவில் இத்தனை நூல்கள்
    வெயீடாகவுள்ளனவோ!.. மிக்க மகிழ்ச்சி ஐயா!

    தங்கள் கவிதைகள் அனைத்தும் இப்படி நூல்வடிவமாகி
    எம் கைக்குக் கிட்டிடல் பெரு மகிழ்வே!
    எல்லா நூல்களிலும் எனக்கும் ஒவ்வொரு பிரதி
    அவசியம் வேண்டும். மிக்க நன்றி ஐயா!

    நல்ல பணி! சிறப்புற நிகழ்ந்திட என் வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கோலக் கவிகளைக் கொட்டிக் குவித்துள்ளேன்!
      ஞாலம் தமிழின் நலம்போற்றும்! - ஆலத்தின்
      வன்மை வழங்கும் வளர்தமிழைக் காத்திடுவோம்!
      நன்மை வழங்கும் நமக்கு!

      Supprimer
  3. Réponses

    1. வணக்கம்!

      சொல்லும் செயலும் சுடர்கின்ற பாத்தொகுப்பு!
      வெல்லும் உலகை விரைந்து!

      Supprimer
  4. இவ்வளவு புத்தகங்களும் வெளியிடப் போகிறீர்களா. நல்லது அருமை அருமை! ஐயா!
    அனைத்தும் சிறப்புற ....! வாழ்த்துக்கள்....!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      எல்லாம் இனியதமிழ் ஈந்த அருளென்பேன்!
      பல்லாண்டு செய்த பயன்!

      Supprimer
  5. அட்டைப்பட தேர்வே சொல்கிறது தங்களின் அற்புதமான அமுதமான ஆக்கம் குறித்து.
    கம்பன் விழாக் காண கண்கள் ஏங்குகிறது.
    தங்கள் புத்தகங்கள் அனைத்தும் எங்களுக்கும் வேண்டும்.
    மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அட்டைப் படம்கண்டு அளித்த கருத்துக்குள்
      கொட்டும் இனிமை குளிர்ந்து!

      Supprimer
  6. நூல் வெளியீட்டுப் பணி சாதாரண பணி அல்ல. தங்களின் உழைப்புக்குக் கிடைத்த அவ்வெற்றியைக் கொண்டாடும் வகையில் இந்நூல்கள் அமைந்துள்ளன. தாங்கள் மென்மேலும் பல நூல்களைப் படைக்க வாழ்த்துக்கள். வெளியீட்டு விழா சிறப்புற அமைய மனம்நிறைந்த வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வெளியீட்டு நன்விழா வெல்லும் தமிழேந்திக்
      களிப்பூட்டும் நெஞ்சுள் கமழ்ந்து!

      Supprimer
  7. ஐந்துநூல்கள் வெளியீடாஐயா எல்லாம்வல்ல இறைவனருள்மென்மேலும்
    தங்களுக்குக்கிடைக்கட்டும் வாழ்த்துக்கள் ஐயா..

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இறைவன் திருவருளால் என்றன் கவிகள்
      நிறைவை அளிக்கும் நிலத்து!

      Supprimer