பெறுவாய் சிறப்பு!
1.
மறஞ்சேர்! அறஞ்சேர்! அறிவு நெறிசேர்!
திறஞ்சேர்! உறவு மறைசேர் - முறைசேர்
செறித்து! மிறை..தீர்! கறை..தீர்! நறவு
நிறைபோல் பெறுவாய் சிறப்பு!
2.
அறஞ்சேர்! அறிவு நெறிசேர்! திறஞ்சேர்!
உறவு மறைசேர் முறைசேர் - செறித்து!
மிறை..தீர்! கறை..தீர்! நறவு நிறைபோல்
பெறுவாய் சிறப்புமறஞ் சேர்!
3.
அறிவு நெறிசேர்! திறஞ்சேர்! உறவு
மறைசேர் முறைசேர் செறித்து! - மிறை..தீர்!
கறை..தீர்! நறவு நிறைபோல் பெறுவாய்
சிறப்புமறஞ் சேர்அறஞ் சேர்!
4.
நெறிசேர்! திறஞ்சேர்! உறவு மறைசேர்
முறைசேர் செறித்து! மிறை..தீர்! - கறை..தீர்!
நறவு நிறைபோல் பெறுவாய் சிறப்பு!
மறஞ்சேர் அறஞ்சேர் அறிவு!
5.
திறஞ்சேர்! உறவு மறைசேர் முறைசேர்
செறித்து! மிறை..தீர்! கறை..தீர்! - நறவு
நிறைபோல் பெறுவாய் சிறப்பு! மறஞ்சேர்
அறஞ்சேர்! அறிவு!நெறி சேர்!
6.
உறவு மறைசேர் முறைசேர் செறித்து!
மிறை..தீர்! கறை..தீர்! நறவு - நிறைபோல்
பெறுவாய் சிறப்பு! மறஞ்சேர் அறஞ்சேர்!
அறிவு!நெறி சேர்!திறஞ் சேர்!
7.
மறைசேர் முறைசேர் செறித்து! மிறை..தீர்!
கறை..தீர்! நறவு நிறைபோல் - பெறுவாய்
சிறப்பு! மறஞ்சேர் அறஞ்சேர் அறிவு!
நெறிசேர் திறஞ்சேர் உறவு!
8.
முறைசேர் செறித்து! மிறை..தீர்! கறை..தீர்!
நறவு நிறைபோல் பெறுவாய் - சிறப்பு!
மறஞ்சேர் அறஞ்சேர்! அறிவு நெறிசேர்!
திறஞ்சேர்! உறவுமறை சேர்!
9.
செறித்து! மிறை..தீர்! கறை..தீர்! நறவு
நிறைபோல் பெறுவாய் சிறப்பு! - மறஞ்சேர்
அறஞ்சேர்! அறிவு நெறிசேர்! திறஞ்சேர்!
உறவுமறை சேர்!முறை சேர்!
10.
மிறை..தீர்! கறை..தீர்! நறவு நிறைபோல்
பெறுவாய் சிறப்பு! மறஞ்சேர் - அறஞ்சேர்!
அறிவு நெறிசேர்! திறஞ்சேர்! உறவு
மறைசேர் முறைசேர் செறித்து!
11.
கறை..தீர்! நறவு நிறைபோல் பெறுவாய்
சிறப்பு! மறஞ்சேர்! அறஞ்சேர்! - அறிவு
நெறிசேர்! திறஞ்சேர்! உறவு மறைசேர்!
முறைசேர் செறித்து!மிறை.. தீர்!
12.
நறவு நிறைபோல் பெறுவாய் சிறப்பு!
மறஞ்சேர் அறஞ்சேர்! அறிவு - நெறிசேர்!
திறஞ்சேர்! உறவு மறைசேர் முறைசேர்
செறித்து!மிறை.. தீர்!கறை.. தீர்!
13.
நிறைபோல் பெறுவாய் சிறப்பு! மறஞ்சேர்
அறஞ்சேர்! அறிவு நெறிசேர்! - திறஞ்சேர்!
உறவு மறைசேர் முறைசேர் செறித்து!
மிறை..தீர்! கறை..தீர்! நறவு!
14.
பெறுவாய் சிறப்பு! மறஞ்சேர் அறஞ்சேர்!
அறிவு நெறிசேர்! திறஞ்சேர்! - உறவு
மறைசேர் முறைசேர் செறித்து! மிறை..தீர்!
கறை..தீர்! நறவு!நிறை போல்!
15.
சிறப்பு மறஞ்சேர்! அறஞ்சேர்! அறிவு
நெறிசேர்! திறஞ்சேர்! உறவு - மறைசேர்
முறைசேர் செறித்து! மிறை..தீர்! கறை..தீர்!
நறவு!நிறை போல்!பெறு வாய்!
இலக்கணக் குறிப்பு
பதினைந்து மண்டிலம் என்பது முதல் வெண்பாவின் முதல் சீர், இரண்டாம் வெண்பாவில் இறுதியாக வரும். இரண்டாம் சீர் முதல் சீராக வரும். இப்படியாகப் பதினைந்து சீர்களும் முதல் சீராக வந்தமையப் பாடுவது. முதல் வெண்பாவில் உள்ள சீர்களைப் போன்றே, எழுத்துகளும் அனைத்து வெண்பாவில் வரவேண்டும். வல்லினம் மிகும் சொற்கள் இம்மண்டிலத்தில் வாரா!
இலக்கணக் குறிப்பு
பதினைந்து மண்டிலம் என்பது முதல் வெண்பாவின் முதல் சீர், இரண்டாம் வெண்பாவில் இறுதியாக வரும். இரண்டாம் சீர் முதல் சீராக வரும். இப்படியாகப் பதினைந்து சீர்களும் முதல் சீராக வந்தமையப் பாடுவது. முதல் வெண்பாவில் உள்ள சீர்களைப் போன்றே, எழுத்துகளும் அனைத்து வெண்பாவில் வரவேண்டும். வல்லினம் மிகும் சொற்கள் இம்மண்டிலத்தில் வாரா!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
கவிதையின் அழகு தனிச்சிறப்பு சீர்கள் ரசித்தேன்.
RépondreSupprimerஐயா வணக்கம்.
RépondreSupprimerசொற்சூட்டில் நெஞ்சம் சுமந்தலைந்த நற்கவிதை
கற்கண்டு! பாடலெனும் விற்கொண்டு - பெற்ற
வரம்கொண்டு தந்தீர் வணங்குகிறேன் என்கை(ச்)
சிரங்கவிய பாரதிதா ச !
வியக்கிறேன். கற்கிறேன்.
மிக்க நன்றி ஐயா.
Supprimerஎன்கூட்டுள் வாழ்கின்ற இன்பத் தமிழருளால்
இன்பூட்டும் வெண்பா எழுந்ததுவே! - அன்பூட்டும்
பண்பூட்டும் என்பேன்! படர்புகழ்ச் சீரோங்கப்
பண்ணுாட்டும் என்பேன் பணிந்து!
அழகிய கவிதை
RépondreSupprimerமிகவும் அற்புதம் ஐயா. தங்கள் முயற்சியை சரியாக புரிந்துகொள்ளவே எனக்கு நாட்கள் ஆகும்.
RépondreSupprimerவணக்கம் ஐயா!
RépondreSupprimerசிறப்பும் தெளிவும் திகழ்ந்திடும் பாக்கள்!
திறக்கும் மகிழ்வையும் சேர்த்து!
தங்களின் ஆற்றல்கள் எத்தனை எத்தனை விதமாக மிளிர்கிறது!
வாய் பிளந்து நிற்கின்றேன்!..
வளம்மிக்க சீர்கள் வரிசை கட்டி வரும் அழகு சொல்லிட முடியாதது!
அகராதி தேடாமல் பொருள் விளங்கும் பாக்கள் சிறப்புறும் என்பதற்குத்
தங்கள் பாக்களே சான்று!
மிக அருமை ஐயா! நன்றியுடன் வாழ்த்துக்களும்!
பதினைந்து மண்டிலம் பற்றி அறிந்தேன். நன்றி.
RépondreSupprimerஅன்புள்ள அய்யா,
RépondreSupprimerபதினைந்து மண்டிலம் வெண்பா பாடி அசத்திவிட்டீர்!
பதினைந்து மண்டிலம் வெண்பா படித்து அதிசயத்து நிற்கின்றோம்...!
சொல்லில் விளையாடும் சூட்சுமம் சொல்லிக் கொடுக்க...
அள்ளிக் கொடுக்க...
அன்பால் கொடுக்க...
தமிழ்ப்பால் பருக
ஆவன செய்து அருள் புரிக!
-மிக்க நன்றி.
RépondreSupprimerகற்று மகிழ்ந்தேன்! கனித்தமிழ் நன்மரபை
உற்று மகிழ்ந்தேன்! உயர்வடைந்தேன்! - நற்றமிழில்
வித்தை பலகாட்டும் வேந்தரே! பூத்தமலர்க்
கொத்தை அளித்தேன் குனிந்து!
Supprimerவணக்கம்!
மண்டிலப் பாடல் மகிழ்வை அளித்ததெனில்
ஒண்டமிழ் தந்த உயர்வென்பேன்! - நண்பனே!
உன்றன் கவிதைகள் என்றன் உளத்துக்குள்
என்றும் இருக்கும் இனித்து!
வணக்கம் அய்யா,
RépondreSupprimerகவி படைக்கும் பாவலரே தங்கள்
கவி மண்டலம் கண்டு கரம் குவித்தேன்
வாழ்த்த வயதில்லை யாயின் வணங்குகிறேன்
வணங்கும் கரம்கு வித்தே
நன்றி அய்யா.
வணக்கம் ஆசிரியர் ஐயா! படித்து இன்புற்றேன். பதினைந்து மண்டலம் அறிந்து கொண்டேன்! தொடர்ந்தும் உங்கள் வலைப்பூக் கல்விக்கூடத்தில் கற்றுக்கொள்வேன். மிக்க நன்றி ஆசிரியர் ஐயா!
RépondreSupprimer