vendredi 28 décembre 2012

மீண்டுமோர் ஆசை [பகுதி - 3]




மீண்டுமோர் ஆசை [பகுதி - 3]

முன்னே நடந்து செல்கின்றாள்!
     பின்னே தொடா்ந்து போகின்றேன்!
என்னே அவளின் பின்னழகும்!
     ஏதோ ஏதோ செய்கிறது!
பெண்ணே! மெல்ல முகம்திருப்பி
     என்னை இழுத்த இருவிழிகள்!
கண்ணே மீண்டும் அக்காட்சி
     காணத் துடிக்கும் ஓா்ஆசை!

வேலும் வாளும் பாயம்பும்
     விழியின் முன்னே தோற்றோடும்!
மாலும் மாதை மார்பேந்தி
     மகிழும் விந்தை அறிகின்றேன்!
தோலும் சிலிர்க்கும்! என்றனிரு
     தோளும் புடைக்கும்! அவள்பார்வை
மேலும் மேலும் வேண்டுமென
     மீண்டும் பொங்கும் ஓா்ஆசை!

(தொடரும்)

5 commentaires:

  1. Réponses

    1. வணக்கம்!

      அழகுத் தமிழில் அரும்பாசைப் பாட்டில்
      ஒழுகும் மதுவை உறிஞ்சு!

      Supprimer
  2. அருமை அயயா. பாடலினைப் படிக்கும் போதே, காட்சியும் மனக் கண்ணில் விரிகிறது.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கண்முன் கவிதையின் காட்சி தெரியுமெனில்
      பண்நான் படைத்த பயன்!

      Supprimer

  3. வணக்கம்!

    உள்ளம் மகிழ உரைத்த கருத்துக்கள்
    வெல்லம் படைத்த விருந்து!

    RépondreSupprimer