விருத்த மேடை - 103
அறுசீர் விருத்தம்
[முதல் நான்கு
சீர்கள் வெண்டளை+மா+தேமா]
மறையின் மணந்தாரை வன்பரதர்
……… பாக்கத்து
மடவார் செங்கை
இறைவளைகள் துாற்றுவதை
ஏழையம்
……… எங்ஙனம்யாங்[கு]
அறிகோம்? ஐய!
நிறைமதியும்
மீனும் எனஅன்னம்
……… நீள்புன்னை
அரும்பிப் பூத்த
பொறைமலிபூங்
கொம்பேற வண்டாம்பல்
……… ஊதும் புகாரே
எம்மூர்!
[சிலப்பதிகாரம்,
கானல் வரி - 29]
கல்வித் தகத்தால்
திரைசுழ்
……… கடற்காழிக்
கவுணி சீரார்
நல்வித் தகத்தால்
இனிதுணரும்
……… ஞானசம்
பந்தன் எண்ணும்
சொல்வித் தகத்தால்
இறைவன்
……… திருநா
ஏத்து பாடல்
வல்வித் தகத்தான்
மொழிவார்
……… பழியில்இம்
மண்ணின் மேலே!
[திருஞானசம்பந்தர்
தேவாரம் - 2255]
பெருமை
பெண்ணின் பெருமையைப்
பேணிப் புகழ்ந்திடப்
……… பெருகும்
சீரே!
மண்ணின் பெருமையை
வாழ்த்தி மகிழ்ந்திட
……… மணக்கும்
தாரே!
எண்ணின் பெருமையை
ஏத்தித் தெளிந்திட
……… ஏந்தும்
ஊரே!
பண்ணின் பெருமையைப் பாடிக் களித்திடப்
……… படரும்
பேரே!
[பாட்டரசர்]
10.04.2026
முதல் நான்கு சீர்கள் வெண்டளையில் அமையும்.
ஐந்தாம் சீர் மாச்சீர் ஆகும். ஆறாம் சீர் தேமாவாகும்.
இவ்வமைப்பிலேயே நான்கடிகள் வரும். நான்கடிகள் ஓரெதுகை பெறும். ஒன்று ஐந்தாம் சீர்கள்
மோனையுறும்.
விரும்பிய தலைப்பில் இவ்வகை அறுசீர்
விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
பாட்டரசர்
கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
உலகத் தமிழ்ச் சிறகம்
10.04.2026
Aucun commentaire:
Enregistrer un commentaire