jeudi 1 mars 2018

விருத்த மேடை - 35




விருத்த மேடை - 35

அறுசீர் விருத்தம்  - 35
[கருவிளம் 5 + புளிமா]

பாட்டினில் அன்புசெய்! [பாரதியின் புதிய ஆத்திசூடி]

தனதன எனுமிசை தமிழ்தரும் அமுதிசை
   தகைநலம் தருமே!
மனமுறும் புதுவிசை மதியுறும் பலதிசை
   மலர்புகழ் இடுமே!
வனமுறும் மணமென மழைதரும் வளமென
   வரகவி வருமே!
கனகன வெனுமொலி கலகல எனும்நடை
   கவிதையின் வரமே!

       [பாட்டரசர் கி. பாரதிதாசன்]

கருவிளம் 5 + புளிமா என்ற வாய்பாட்டில் ஓரடி அமைய  வேண்டும். இவ்வாறு நான்கடிகள் ஓரெதுகை பெற்று வரவேண்டும். ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமைய வேண்டும்.

ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
    
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
01.03.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire