புத்தாண்டே வா..வா பொலிந்து!
எங்கும் இனிமை இசைந்தாட! கற்றோங்கிப்
பொங்கும் புலமை பொலிந்தாட!
- தங்குநலம்
பூத்துக் கமழ்ந்தாடப் புண்ணியனே!
புத்தாண்டைக்
காத்துப் படைப்பாய் கணித்து!
ஒற்றுமை ஓங்கிடவும் இவ்வுலகே
ஓரினமாம்
பற்றினை உற்றன்பு பாடிடவும்
- நற்குறளைக்
கற்றுக் களித்திடவும் கண்ணனே!
புத்தாண்டைப்
முற்றும் மகிழ்வுற மூட்டு!
01.01.2015
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
RépondreSupprimerஐயா வணக்கம்.
RépondreSupprimerகணித்துச் செழித்துக் கொடுத்துக் களித்துப்
பிணித்துத் தொகுத்துப் பகுத்து - அணித்து
விழுந்து நலிந்து மெலிந்து கிடந்த
கொழுந்து வளர்த்ததுங் கை!
புத்தாண்டு வாழ்த்துகள்.
நன்றி
வெண்பா வேந்தனின் கவியழகு படிப்பவரைத் தன்பால் ஈர்க்கிறது. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா !
RépondreSupprimerஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அய்யா.கண்ணனைத் துதிக்கும் புத்தாண்டு வெண்பா அழகு.
RépondreSupprimerஎன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா ...!
RépondreSupprimerஇனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
RépondreSupprimerஇனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா.
RépondreSupprimerபுத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா
RépondreSupprimerகவிஞருக்கும், குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
RépondreSupprimerதமிழ் மணம் 3
வணக்கம் ஐயா!
RépondreSupprimerஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
கண்ணனை வேண்டிக் கனிவோடு பாவிசைத்தீர்!
வண்ணன் மகிழ்ந்தளிப்பான் வாழ்வு!
அருமையான வெண்பாப் பூக்களால்
அரங்கனை வேண்டினீர்கள்! எங்கும் எல்லாம் சிறக்கட்டும்!
நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
RépondreSupprimer