lundi 3 novembre 2014

சிவ வாசகம்


கவிஞா் இரா. குமாரின்
சிவவாசகம்
நடைமுறை இதழியல்

வணக்கம்!

பிரான்சு கம்பன் விழாவிற்கு வருகை தந்த பேச்சாளா் . இரேணுகா தேவி அவா்களிடம், என் இனிய முகநுால் நணபா் கவிஞா் இரா குமார் அவா்கள், "சிவவாசகம்", "நடைமுறை இதழியல்" என்ற நுால்களைக் கொடுத்தனுப்பினார். மிக்க நன்றி!

கவிஞா் இரா. குமார் எழுதிய சிவவாசகம், நடைமுறை இதழியல் நுால்களைப் பற்றி விரிவாகப் பின்பு கருத்திடுவேன்.

கம்பன் விழா மிகச் சிறப்புடன் நடைபெற்றது. இலக்கியச்சுடா் . இராமலிங்கம் அவா்களின் சொற்பொழிவாலும், திருமதி  அ.இரேணுகாதேவின் சொற்பொழிவாலும் இவ்வாண்டுக் கம்பன் மிக மிகச் சிறப்பாக அமைந்தது. அவா்களுக்கு என்றன் நன்றி!

நற்சிவ வாசகத்தை நல்ல நடைமுறையைப்
பொற்புடன் தந்தார் புகழ்குமார்! - கற்றுக்
களித்தேன்! கவிஞன்யான் கன்னற்றேன் ஆற்றில்
குளித்தேன் முழுதும் குளிர்ந்து!

கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

7 commentaires:

  1. சிசவாசகம் வழங்கிய திரு குமார் அவர்களைப் போற்றுவோம்

    RépondreSupprimer

  2. அன்புள்ள அய்யா,


    வணக்கம். கம்பன் விழா புகைப்படங்கள் எல்லாம் பார்த்து மகிழ்ந்தோம். தங்களின் அரிய பணி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி. கவிஞா் இரா குமார் அவா்கள் "சிவவாசகம்", "நடைமுறை இதழியல்" என்ற நுால்களைத் தங்களுக்குகொடுத்தனுப்பியது கண்டு மகிழ்ந்தேன்.

    பாக்களின் சக்கரவர்த்தியாகத் திகழும் தங்களின்
    பன்முக ஆற்றல்கண்டு பிரமித்துப் போகிறேன்
    நல்லதமிழ்த் தொண்டாற்றும் தூயவரைத் தமிழுலக
    நாயகரைத் நாளும் போற்றி மகிழ்கின்றோம்!

    தாங்கள் பாராட்டியது பெரும் பேராகக் கருதுகிறேன். என் வலைப்பூவிற்கு வந்து நல்ல பல கருத்துகளை வழங்கிட்டமைக்கு என் நெஞ்சார நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தங்களுக்க நேரம் கிடைக்கும் பொழுது ... எனது வலைத்தளத்திற்கு வருகைபுரிந்து கருத்திட அன்புடன் வேண்டுகிறேன்.

    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    RépondreSupprimer
  3. வணக்கம் ஐயா!

    கவிஞர் இரா. குமார் அவர்களின் சிவவாசகம் நடைமுறை
    இதழியல் முன்பக்கம் காட்டி மேலும் அறிந்திட ஆர்வத்தை
    தூண்டிவிட்டீர்கள்!..

    கம்பன் விழா நிழற்படக் காட்சிகள் மட்டும் கண்டோமே...
    கவியரங்கு, பேச்சரங்கு போன்ற விடயங்களையும் காண ஆவலுடையோம்.
    தொகுப்பாகவேனும் தாருங்கள்!

    ஐயா இரா. குமார் அவர்களுக்கும் உங்களுக்கும்
    உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  4. வாழ்த்துக்கள்! நன்றி!

    RépondreSupprimer
  5. பதிவினை படிக்கும் போதே வியக்கிறேன் இத்தனை ஆளுமைகளையும் அடக்கி ஆளும் செந்தமிழைப் போற்றி புகழ்பாடும் கவிஞர்களின் தடமறியும் ஆவல் உதயமாகி உள்ளம் தெளிவுபெறவே எண்ணமெல்லாம் என்னில்...

    RépondreSupprimer
  6. அய்யா வணக்கம்! 'சிவவாசகம்' பெயரிலேயே அதன் சிறப்பு தெரிகிறது. 'நடைமுறை இதழியல்'..முகப்பு அட்டையே அதன் முத்திரைச் சிறப்பைக் காட்டுகிறது.!
    இலக்கியச் சுடர் ராமலிங்கத்தின் பேச்சு.சிரிக்கவும்,சிந்திக்கவும் வைக்கும்.
    ரேணுகா அவர்களின் பேச்சு,தென்றலாய் நம்மை மகிழ்விக்கும்!(நான் அவர்களோடு பல மேடைகளில் பேசியுள்ளேன்) கன்னித்தமிழ் வளர்க்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்..!

    RépondreSupprimer