என்னைக் கஞ்சி காய்ச்சுகிறாள்
ஆண்:
நெஞ்சிக் குள்ளே புகுந்து நீயும்
கஞ்சி
காய்ச்சறையே! - என்னைக்
கஞ்சி
காய்ச்சறையே!
கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் போது
மிஞ்சி
ஓடறையே! - ஐயோ
மிஞ்சி
ஓடறையே!
பெண்:
பிஞ்சிக் கொடியைப் போன்ற என்னுள்
பித்தை
ஏத்தறையே! - ஆசைப்
பித்தை
ஏத்தறையே!
அஞ்சி அஞ்சி நகரும் என்னை
அழகாய்
மாற்றறையே! - ஐயோ
அழகாய்
மாற்றறையே!
ஆண்:
பஞ்சி மிட்டாய்ச் சட்டை போட்டுப்
பசியைத்
துாண்டறையே! - பெரும்
பசியைத்
துாண்டறையே!
விஞ்சி விஞ்சி ஆசை துள்ள
வித்தை
காட்டறையே! - விழி
வித்தை
காட்டறையே!
பெண்:
மஞ்சி விரட்டு மாட்டைப் போன்று
வம்பு
பண்ணறையே! - வீண்
வம்பு
பண்ணறையே!
வஞ்சிக் கொடிதான் வளைந்து சுற்றக்
கொம்பாய்
நிற்கறையே! - ஐயோ
தெம்பாய்
நிற்கறையே!
ஆண்:
வஞ்சி உன்றன் வண்ண விழியால்
மஞ்சம்
தீட்டறையே! - பொன்
மஞ்சம்
தீட்டறையே!
கெஞ்சிக் கெஞ்சிக் கேட்கும் போது
கேள்வி
கேட்கறையே! - ஐயோ
கேள்வி
கேட்கறையே!
பெண்:
பஞ்சி வெள்ளைப் பற்கள் காட்டிப்
பாட்டு
பாடறையே! - தமிழ்ப்
பாட்டு
பாடறையே!
நஞ்சிப் போக நயமாய்ப் பேசிக்
கூட்டுச்
சேரறையே! - கால்
பூட்டுப்
போடறையே!
ஆண்:
பஞ்ச வண்ணக் கிளியாய் வந்து
பாடாய்ப்
படுத்தறையே! - நெஞ்சை
ஓடாய்
நொறுக்கறையே!
நஞ்சை புஞ்சை விளைந்தி ருக்கப்
பஞ்சம்
காட்டறையே! - என்மேல்
வஞ்சம்
கூட்டறையே!
பெண்:
பஞ்சம் இல்லாப் பார்வை யாலே
பற்றி
இழுக்கறையே! - ஆசை
முற்றிக்
கொழுக்கறையே!
துஞ்சும் போதும் துாபம் போட்டுத்
தொல்லை
கொடுக்கறையே! - மனத்தைக்
கொள்ளை
அடிக்கறையே!
ஆண்:
இஞ்சி இடுப்பை இனிதாய்க் காட்டி
என்னை
அசத்தறையே! - இரு
கண்ணை
நசுக்கறையே!
செஞ்சிக் கோட்டை வீரன் என்னைக்
குச்சாய்
ஒடிக்கறையே! - பொய்
வைச்சி
நடிக்கறையே!
பெண்:
தஞ்சா ஊரின் பொம்மை போலத்
தலையை
ஆட்டறையே! - சுகக்
கலையைக்
காட்டறையே!
கஞ்சா போதைக் கண்ணைக் காட்டிக்
கதையை
முடிக்கறையே! - அன்பு
விதையை
விளைக்கறையே!
ஆண்:
அத்தை பெத்த அல்வா துண்டே
அருகே
வந்துவிடு! - வாய்
அமுதைத்
தந்துவிடு!
தத்தை மொழியில் தமிழைப் பேசித்
தாகம்
தீா்த்திவிடு! - இன்
மோகம்
சோ்த்துவிடு!
பெண்:
கத்தை மல்லி கமழக் கமழ
மெத்தை
அமைக்காதே! - எழில்
சொத்தைப்
பறிக்காதே!
முத்தைத் தந்து முத்தம் கேட்டு
மூளை
கெடுக்காதே! - இரு
காலைப்
பிடிக்காதே!
ஆண்:
குண்டு கட்டாய்க் குட்டி உன்னைக்
கூடை
துாக்கிடவா? - மண
மேடை
போட்டிடவா!
பெண்:
நண்டுப் பிடிகள் போட்டே உன்னை
நானும்
தாக்கிடவா! - இன்பம்
நாளும்
ஊக்கிடவா!
ஆண்:
தொண்டு புரியும் துாய மனத்தைக்
கண்டு
களித்திடவா! - தேன்
உண்டு
சுவைத்திடவா!
பெண்:
வண்டாய் வந்து மலரில் அமர்ந்து
ஆடி
நனைந்திடவா! - மாலை
சூடி
இணைந்திடவா!
23.11.2014
அருமை ஐயா
RépondreSupprimerதம 2
வணக்கம்
RépondreSupprimerஐயா.
அழகிய சீர் கொண்ட பாடல் கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
// தத்தை மொழியில் தமிழைப் பேசித்
RépondreSupprimerதாகம் தீா்த்திவிடு! - இன்
மோகம் சோ்த்துவிடு! //
ஆகா...!
கனவில் வந்த காந்தி : http://dindiguldhanabalan.blogspot.com/2014/11/Gandhi.html
அழகான வரிகள்! அருமையான நாட்டுப்புற இசை போன்ற வரிகளுக்கு மெட்டு அமைத்தால் மிகவும் அருமையாக இருக்கும் கவிஞரே! மிகவும் ரசித்தோம்.
RépondreSupprimerஅருமையான கவி // ஆடி நனைந்திடவா! - மாலை
RépondreSupprimerசூடி இணைந்திடவா!// பிடித்த வரிகள் கவி வேந்தே!
குண்டு கட்டாய்க் குட்டி உன்னைக்
RépondreSupprimerகூடை துாக்கிடவா? - மண
மேடை போட்டிடவா!// கவியில் ஐயாவின் குறும்பு!ஹீ
ரசித்துச் சிரிக்க வைக்கும் கவிதை.
RépondreSupprimerஅருமை கவிஞர்.
தம 11
RépondreSupprimerஅருமை ஐயா
ஐயா..!!. இந்த ஜோடிகள் ஓரே சாதியைச் சேர்ந்தவர்கள்தானே........சாதி மறுப்பு காதலர்கள் என்றால் சாதி வெறி காட்டுமிரண்டிகளும், கலவர நாயகர்களும் இவர்களை உயிரோடு கொளுத்தி டுவார்கள்....
RépondreSupprimerமிக மிக அருமை
RépondreSupprimerவார்த்தைகள் படிக்க படிக்க
திருநெல்வேலி அல்வா இனித்தும்..
இயல்பாக படிக்க அமைந்தும் இருப்பது
மனம் கவர்ந்தது.பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
வணக்கம் ஐயா!
RépondreSupprimerகற்பனை அல்ல நேரிற் காணும் காட்சியேதானென
அற்புதமாகக் காட்சிப்படுத்தும் கவியாப்பு ஐயா!
மிகச் சிறப்பு! வாழ்த்துக்கள் ஐயா!
RépondreSupprimerநாட்டுப் புறமணக்கும் நற்றமிழை நன்றாகக்
கேட்டுக் கிளிப்புற்றுச் சொக்குகிறேன்! - காட்டு
மலா்க்குவியல்! கன்னல் மதுவாறு! சந்த
நலக்குவியல்! இன்னும் நவில்!
Supprimerவணக்கம்!
ஆணும் அரும்பெண்ணும் ஆடி அளித்த..பா
காணும் விழிகள் களிப்புறுமே! - பேணுதமிழ்ச்
செல்வா! சிறந்த செயல்வீரா! உன்வெண்பா
அல்வா சுவையென்பேன் ஆழ்ந்து!
ரசிக்க வைத்த நாட்டுப்புறப் பாடல்! அருமை!
RépondreSupprimerகஞ்சிக் கவிகண்டால் காய்கின்ற காதலரின்
RépondreSupprimerநெஞ்சின் நெருப்பணைந்து நீங்கிடுமே - அஞ்சும்
நிலையகற்றி ஆனந்த நீருண்டு காதல்
கலையறிந்து கொள்வர் களிப்பு !
அழகான பாடல் ஐயா வாசித்து மகிழ்ந்தேன்
வாழ்க வளமுடன்