கண்ணழகு காரிகை
(ஓரடிநொண்டிச்சிந்து)
1.
என்றனுயிர் வாழுகவி யாள்ooo oo-இன்பம்
ஏந்திவரும் தென்றலென நீந்திவரு வாள்ooo
2.
முல்லைமலர்ப் பற்களுடை யாள்ooo oo-என்றன்
மூளையினை மூடுகிற சேலையணி வாள்ooo
3.
அன்னநடை பின்னுமெழி லாள்ooo oo-வந்தே
ஆசையுறச் சந்தமொழி ஓசைதரு வாள்ooo
4.
தேனொழுகும் சொற்களுடை யாள் ooo oo-தினம்
தேடிவர மூடிமுகம் ஓடிமறை வாள்ooo
5.
வண்ணவிழி கொண்டவழ காள்ooo oo-வந்தே
மாட்சியுறச் செந்தமிழை ஆட்சிபுரி வாள்ooo
6.
முத்தொளிரும் மூoக்குடை யாள்ooo o-கனவை
மூட்டுகிற வண்ணமுடன் ஆட்டமிடு வாள்ooo
7.
பஞ்சியுடல் பிஞ்சிவிர லாள்ooo oo-உயிரைப்
பற்றுகிற காதலிசை கற்றுமகிழ் வாள்ooo
8.
சண்டையிடும் கெண்டைவிழி யாள்ooo oo-நாளும்
தங்கிமனம் இன்பமுறப் பொங்கிவழி வாள்ooo
9.
மேகமெனக் கூந்தலுடை யாள்ooo oo-உயிருள்
மேவிநடம் ஆடுகிற தேவியெழி லாள்ooo
10.
தோகைவிழி கோலமுடை யாள்ooo oo-மான்போல்
துள்ளிவரும் என்னுயிரைத் தள்ளிவிடு வாள்ooo
பாட்டரசர் கி. பாரதிதாசன்
14.02.2021
Aucun commentaire:
Enregistrer un commentaire