ஒயிற்கும்மி [முடுகியல் பெற்றது]
1.
தண்டைகு லுங்கிட வந்தவ ளாம் - இன்பத்
தண்டமிழ் ஓங்கிடத் தந்தவ ளாம்oo
சந்தந்தர முந்துந்தமிழ் எங்கும்புகழ் தங்குங்கலை
சாற்றிட மன்மதன் காப்பாமே ooo!
2.
பூவாக மெல்லடி உற்றவ ளாம் - மாயப்
புன்னகை வீசிடக் கற்றவ ளாம்oo
பூத்துக்கொடி தோப்புக்கனி கோத்துக்கவி மூத்துத்திகழ்
பொற்பினை வாழ்வினில் பெற்றவ ளாம்oo
3.
மெட்டியின் இன்னிசை மீட்டிடு வாள் - பஞ்சு
மெத்தைமேல் இன்பத்தைத் தீட்டிடு வாள்oo
வித்தைத்தரு முத்தக்கலை கற்றுத்தர எச்சிற்சுவை
விஞ்சிட மோகத்தை மூட்டிடு வாளoo!
4.
தாமரை பாதங்கள் மின்னிடு மே - அவை
தாம்செலும் மண்மீது பொன்னிடு மேoo
தகையேமிகு தமிழேயவள்! தலையேமிகு குணமேயவள்!
தண்விழி பூமாலை பின்னிடு மேoo
5
அன்னங்கள் கண்டுளம் ஏங்கின வே - அவள்
ஆடுந டங்கண்டு வீங்கின வேoo
அணியேயென அமுதேயென அறிவேயென அழகேயென
அன்பினில் சொக்கியே துாங்கின வேoo
பாட்டரசர் கி. பாரதிதாசன்
31.01.2021
Aucun commentaire:
Enregistrer un commentaire