dimanche 31 janvier 2021

ஓரடிக் கும்மி

 

கண்ணன் ஓரடிக் கும்மி

 

கண்ணன் திருப்புகழ் பாடிடு வோம் -  கும்மி

கைகொட்டிக் கைகொட்டி ஆடிடு வோம்oo

 

மாமலை மாயனைக் கூடிடு வோம் - அவன்

மஞ்சத்தைச் நெஞ்சத்துள் சூடிடு வோம்oo

 

பாற்கடல் மேல்துயில் கொண்டவ னே - தமிழ்ப்

பாக்கடல் மேலுயிர் பூண்டவ னேoo

 

பூம்பள்ளி கொண்டிடும் பொன்னழ கன் - மதுப்

போதையைத் தந்திடும் கண்ணழ கன்oo

 

சங்குடன் சக்கரக் கையுடை யான் - மாயம்

தந்தொளிர் மந்திர மையுடை யான்oo

 

பூமகள் ஆழ்கின்ற மார்புடை யான் - சந்தப்

பாமகள் சூழ்கின்ற வாழ்வுடை யான்oo

 

வில்லம்பு மாறாத சீருடை யான்  - என்றும்

சொல்,அன்பு  மாறாத பேருடை யான்oo

 

பொன்மானை நாடியே ஓடிய வன்  -  பின்னே

பெண்மானைத் தேடியே வாடிய வன்oo

 

தம்பியர் நற்படை ஓங்கிவ ரும் - பாடத்

தண்டமிழ் நற்றொடை ஏங்கிவ ரும்oo

 

ஆழ்வாரின் பாட்டினில் ஆழ்ந்திடு வான் - பாடும்

அன்பகக் கூட்டினில் வாழ்ந்திடு வான்oo

 

பாட்டரசன் கி. பாரதிதாசன்

30.01.2021

Aucun commentaire:

Enregistrer un commentaire