விருத்த மேடை -
3
அறுசீர்
விருத்தம் - 3
[காய் + காய்
+ காய் + காய்
+ மா + தேமா]
என்னினத்தைக்
கீழ்த்தள்ளி ஏமாற்றி வாழ்ந்ததெலாம்
இறந்த
காலம்!
வன்னினத்தை
அறியாமல் வாய்ப்பேச்சி மாயங்கள்!
வறண்ட
காலம்!
பொன்னினத்தைப்
புவியாண்ட புகழினத்தைப் பிரித்தாண்ட
பொய்யர்
காலம்!
தன்னினத்தைக்
காத்திடவே தமிழிளைஞன் கண்திறந்தான்
தழைக்கும்
வாழ்வே!
இப்பாடல் "காய் + காய் + காய் + காய் + மா + தேமா" என்ற சீரமைப்பை ஓரடியாகக் கொண்டது. இவ்வமைப்பிலேயே நான்கடிகள் அமைந்திருக்க வேண்டும். நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும். ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.
இலக்கணம் நுாற்பா
முதனான்குங் காயாகிப் பின்னவை,மா தேமாவாய்
முடியு மன்றே
- விருத்தப் பாவியல் [3]
"இளையோர் அணி விழித்தெழுகவே " என்ற தலைப்பில் இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்பாவைப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
23.02.2017
Aucun commentaire:
Enregistrer un commentaire