samedi 20 août 2016

ஒன்றில் மூன்று!




ஒன்றில் மூன்று!
[ ஒரே பாடலை மூன்றாகப் பகிர்தல்]

கட்டளைக் கலித்துறை

தனித்தமிழ்த் தந்தை! தகைத்தமிழ் கற்போம்! தழைக்குமன்பு!
கனித்தமிழ் நேயர்! வகைத்தமிழ் கற்போம்! கழிக்குமின்னல்!
நனிதமிழ்ச் சித்தர்! நகைத்தமிழ் கற்போம்! அழைக்குமுச்சம்!
புனைதமிழ் கற்போம்! புகழ்த்தமிழ் கற்போம்! இழைக்குமின்பே!

1 . வஞ்சித்துறை

தனித்தமிழ்த் தந்தை!
கனித்தமிழ் நேயர்!
நனிதமிழ்ச் சித்தர்!
புனைதமிழ் கற்போம்!

2. வஞ்சித்துறை

தகைத்தமிழ் கற்போம்!
வகைத்தமிழ் கற்போம்!
நகைத்தமிழ் கற்போம்!
புகழ்த்தமிழ் கற்போம்!

3. வஞ்சித்துறை

தழைக்கும் அன்பு!
கழிக்கும் இன்னல்!
அழைக்கும் உச்சம்!
இழைக்கும் இன்பே!

இலகக்கணக் குறிப்பு:
ஒரு செய்யுள் ஒரு பொருள் பயப்பதன்றி, அதுவே மூன்று செய்யுளாய்ப் பிரிந்து வெவ்வேறு பொருள் தருமாறு வர வேண்டும்.

பாட்டரசர் கி. பாரதிதாசன்
20.08.2016

2 commentaires:

  1. பிரமாதம் ! என்ன புலமை ! படித்தவுடன், இதுபோல நாமும் எழுத வேண்டும் என்று தோன்றுகிறது,,,,! "பாட்டரசன்" என்று சொன்ன பின்னர் வேறு என்ன சொல்வது...!

    RépondreSupprimer