lundi 19 janvier 2015

நுால் வெளியீடு

புதுக்கோட்டையில்
பட்டுக்கோட்டை மக்கள் இயக்கம் நடத்தும்
இலக்கியத் திருவிழாவில் என்னுடைய
"ஏக்கம் நுாறு" " கனிவிருத்தம்"  
ஆகிய கவிதை நுால்கள் வெளியிடப்படுகின்றன. 
வருகைதந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்

 
 
 

21 commentaires:

  1. வணக்கம் ஐயா!

    பொங்கு தமிழழகிற் பூத்திடும் பாக்களால்
    சங்கீத இன்னிசை தாளமிடும்! - எங்களின்
    நற்கவிஞர் ஏற்றிய நன்நூற்கள் திக்கெட்டும்
    போற்றவே வாழ்க! பொலிந்து!

    எங்கள் கவிஞரின் ஏற்றமிகு நன்நூற்கள்
    சங்கத் தமிழிற்கே சான்று!
     
    அழைப்பிதழ் மிக அழகாக இருக்கின்றது!

    விழாவும் நல்லபடி நடந்து நூற்களின் வெளியீடு சிறப்புற நடைபெறவும்
    உலகெலாம் உங்கள் புகழ்பரவவும் உளமார்ந்த நல் வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer
  2. கவிஞர் அய்யாவிற்கு வாழ்த்துக்கள்.
    த.ம.6

    RépondreSupprimer
  3. வணக்கம்
    ஐயா.
    அழைப்பிதலை பார்த்தவுடன் மனதில் மகிழ்ச்சி பொங்கியது.. வாழ்த்துக்கள் ஐயா த.ம 8
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  4. நூல் வெளியீட்டுவிழா சிறப்பாக நடைபெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
  5. விழா, பல்லாற்றானும் சிறக்க வாழ்த்துகிறேன்.

    RépondreSupprimer
  6. விழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
  7. நூல் வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள் ஐயா! இந்தியா வருகிறீர்கள். வாய்ப்பிருந்தால் சந்திக்க ஆவல். புதுக்கோட்டை என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது நம் முத்து நிலவன் ஐயா அவர்கள்.நிகழ்ச்சியில் அவரும் பங்கேற்கிறாரா?

    RépondreSupprimer
  8. நூல் வெளியீட்டு விழா சிறப்புற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....!

    ஏற்றிடும் தீபமாய் நின்றே ஒளிரட்டும்
    போற்றிப் புகழும் தமிழ்!

    RépondreSupprimer
  9. வணக்கம் !

    ஏக்கம்நூ றிவ்வுலகில் ஏற்றத்தைத் தந்திடவே
    ஊகம் அளிப்பான் உமைமைந்தன் !-நோக்கிட
    எந்நாளும் பொங்கட்டும் இன்பமது வாழ்வெல்லாம்
    நந்தவன மாகிடத் தான்!

    வாழ்த்துக்கள் ஐயா வெற்றிக் களிப்போடு சென்று வாருங்கள் !

    RépondreSupprimer
  10. அய்யா வணக்கம். முன்னர் நான் எழுதிய பின்னூட்டம் கிடைக்கவிலலையா?
    கணினித் தமிழச்சங்கம் சார்பாகப் புதுக்கோட்டைக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம் தாங்கள் முன்னதாகத் தெரிவித்தால் தங்களை வந்து சந்திக்கவும் புதுக்கோட்டை வலைநண்பர்கள் ஆவலுடன் இருக்கிறோம். அன்பு கூர்ந்து தெரிவிக்க வேண்டுகிறேன்.

    RépondreSupprimer
    Réponses
    1. ஐயா வணக்கம். நாளை 22-01-2015- மாலை 6மணிக்கு நான் நாகூர் நிகழ்ச்சியில் இருப்பேன் எனவே நாளையெனில் மதியம் ஒரு மணிக்குள் பேசவேண்டுகிறேன். அல்லது இன்று (21-01-2015) மாலை எப்போது வேண்டுமாயினும் பேசலாம். மின்னஞ்சலில் தொடர்புகொண்டால் இன்னும் நல்லது -muthunilavanpdk@gmail.com எனது செல்பேசி எண்-+91 94431 93293. நன்றி வணக்கம்.

      Supprimer
  11. சிந்தை மகிழ்ந்திட சிந்திய பாக்களும்
    வந்தே சபையினில் மாண்புற -செந்தேன்
    வடியும் விருத்தத்தில் வண்டாக நாமும்
    குடியிருப் போமே குழைந்து .
    தாமத வருகைக்கு மன்னிக்கவும் ஐயா. விழா சிறக்க வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
  12. விழா சிறப்பாக நடைபொற வாழ்த்துகள்! தாங்கள் தமிழகம் வந்துள்ளீர்களா! தகவல் தெரிவிக்க வில்லையே! சென்னை வருவீர்களா? பாண்டியில் உள்ளீர்களா? விவரம் தேவை! உடன் தெரிவிக்க வேண்டுகிறேன்! உறுதியாக செய்வீர்கள் என்று நம்புகிறேன்!

    RépondreSupprimer
  13. வாழ்த்துக்கள் கவிஞர்.

    த.ம. 13

    RépondreSupprimer
  14. விழா இனிதே வெற்றிபெற வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  15. மகிழ்வூட்டும் செய்தி
    விழா சிறப்புற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  16. ஐயாவணக்கம் நான்28ஜனவரிஅன்று தங்களுக்கு கருத்துப்போட்டு இருந்தேன்
    ஏன் அது வெளியாகவில்லை என்றுதெரியவில்லைஅதனால் மீண்டும்.
    நற்கவியே வருக! வருக!புதுகை நனையட்டும் தங்களின் கவியால்(கனிவிருத்தத்தால்)

    RépondreSupprimer
  17. அன்புடன் வரவேற்கிறோம் அய்யா

    RépondreSupprimer