பொலிக.. பொலிக.. புத்தாண்டே!
அன்பு மழைபொழிந்து பண்புப்
பயிர்விளைந்து
என்றும் இனிமை இசையளித்து - இன்பமுடன்
முத்தாண்டு பூக்கும் முழுமதிபோல்
வந்திங்குப்
புத்தாண்டு பூக்கும் பொலிந்து!
எங்கும் நிறைந்த இறைவன் திருவருளால்
தங்கும் வளங்கள் தழைக்கட்டும்! - பொங்குதமிழ்
இன்னெறியை எந்நாடும் ஏற்கட்டும்! சன்மார்க்கப்
பொன்னெறியைப் போற்றிப் புகழ்ந்து!
மனிதம் மலர்ந்து மணம்வீச!
மகிழ்ந்தே
உலகோர் தமிழ்பேச!
புனிதம் பூத்துப் புகழ்மேவ!
பொறுமை!
பொதுமை அரசாள!
கனியும் தேனும் கலந்துாறும்
கம்பன்
கவிபோல் வாழ்வொளிர!
நினைவும் கனவும் நிறைவேற
நெகிழ்ந்து
வருக புத்தாண்டே!
உண்மை ஓங்கி ஒலிக்கட்டும்!
உயிர்கள்
யாவும் களிக்கட்டும்!
தண்மை தழைத்துச் செழிக்கட்டும்!
தமிழ்போல்
இனிமை கொழிக்கட்டும்!
பெண்மை பேணும் நல்லறங்கள்
பெருகும்
புகழை வடிக்கட்டும்!
வெண்மைப் பனிபோல் தெளிவேந்தி
விரைந்தே
வருக புத்தாண்டே
01.01.2015
வணக்கம்
RépondreSupprimerஐயா
புத்தாண்டு கவி கண்டு மகிழ்ந்தேன்...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Supprimerவணக்கம்!
சித்தாண்டு மின்னும் செழுந்தமிழின் சீருரைத்தேன்
புத்தாண்டு வாழ்த்தைப் பொழிந்து!
இனிமைத் தமிழால் புத்தாண்டு சிறந்தது.
RépondreSupprimerபுத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா
Supprimerவணக்கம்!
இந்தப்புத் தாண்டில் இனிமை பெருகட்டும்!
சந்தத் தமிழ்போல் தழைத்து!
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா
RépondreSupprimerவணக்கம்!
Supprimerமதுரத் தமிழ்போல் மனமினிக்க வேண்டும்!
புதிய வருடம் பொலிந்து!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
RépondreSupprimerஅன்புடன் DD...
Supprimerஇந்தநாள் போன்றே இனிவரும் நாளெல்லாம்
சிந்தை இனிக்கும் சிறந்து!
// கனியும் தேனும் கலந்துாறும்
RépondreSupprimerகம்பன் கவிபோல் வாழ்வொளிர!// அருமையான உவமானம் ! புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா !
Supprimerவணக்கம்!
கவியைக் கணித்துக் கருத்திட்டீர்! என்..கை
குவித்தேன் மனமே குளிர்ந்து
தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
உலகம் மகிழ்ந்தே ஒளிர்கின்ற நாளே
நலமாய் வளமாய் நட!
புத்தாண்டு பிறக்கட்டும் புது நன்மைகள் கிடைக்கட்டும்
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
புதுமைப் புகழேந்திப் புத்தாண்டே வாராய்!
புதுவைத் தமிழ்போல் பொலிந்து!
மணக்கும் கவிகள் மனம்சேர வார்த்தீர்
RépondreSupprimerவணங்கித் தொழுவேன் மகிழ்து.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா.
Supprimerவணக்கம்!
உலாவரும் தென்றலே! உன்றன் கவியில்
பலாவரும் நன்றே பழுத்து!
எங்கும்இன் பம்பொழிய இன்கவி தந்தீர்
RépondreSupprimerதங்கும் மகிழ்வு தொடர்ந்து !
ஒளி பொருந்திய வாழ்வு மலர
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....!
Supprimerவணக்கம்!
தங்கும் மகிழ்வில் தழைத்திடுக! எந்நாளும்
பொங்கும் கவிகள் பொழிந்து!
RépondreSupprimerஆங்கிலப் புத்தாண்டை அன்பாய் வரவேற்றீர்!
தீங்கனித் தேன்சுளைச் சீரளித்தீர்! - ஓங்குதமிழ்
காத்து மணக்கும் கவிபடைத்தீர்! பூங்கொடிபோல்
பூத்து மணக்கும் புவி!
Supprimerதேடிவந்த புத்தாண்டைத் தேன்தமிழ்ச் சீரேந்திப்
பாடிவந்த பாவலனே! பண்ணமுதே! - நாடிவந்து
வீசும் மலர்க்காற்றாய் விந்தை நலமளித்தாய்!
பேசும் புகழைப் பிணைத்து
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கவிஞர் அண்ணா. வளங்கள் யாவும் உமதாக்கி வாழ நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
RépondreSupprimerதம 6
Supprimerவணக்கம்!
கொஞ்சும் கவிபாடிக் கோல வளம்பெறுக!
விஞ்சும் புகழை விளைத்து!
வணக்கம் ஐயா!
RépondreSupprimerபுத்தாண்டு பூத்துப் பொலியட்டும் எங்குமே!
சத்தாக கற்போம் தமிழ்!
அருமையான வாழ்த்து!
உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா!
Supprimerவணக்கம்!
சத்தாகத் தந்த தமிழுண்டேன்! நன்றியினைக்
கொத்தாகத் தந்தேன் குளிர்ந்து!
என் வலைத்தளத்திற்கு வந்து புத்தாண்டு வாழ்த்துச் சொன்ன உங்கள் பெரும்தன்மைக்கு என் வணக்கங்கள், ஐயா.
RépondreSupprimerஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், எங்களது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
Supprimerவணக்கம்!
அன்புடன் சொன்ன அரும்வாழ்த்து! நெஞ்சத்துள்
என்றும் மணக்கும் இனித்து!
கவிஞர் கி.பாரதிதாசன் அவர்களுக்கு வணக்கம். தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு (2015) நல் வாழ்த்துக்கள்.
RépondreSupprimerத.ம.10
Supprimerவணக்கம்!
தமிழிளங்கோ தந்த தகையுடைத் தேன்வாழ்த்து
அமிழ்தமென ஊறும் அகத்து!
கவிஞரின் புத்தாண்டு கவிகை கண்டேன் இன்று, கற்கண்டாய் இனித்ததே நன்று.
RépondreSupprimerஇனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் 2015
கவிஞரை, இன்றைய எமது புதிய பதிவு காண அழைக்கிறேன்...
தலைப்பு....
எமனேஸ்வரம், எழுத்தாளர் எமகண்டன்.
அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.
Supprimerவணக்கம்!
நற்றேவக் கோட்டையார் நல்கிய வாழ்த்துமலா்
கற்கண்டைக் காட்டும் கமழ்ந்து!
"கனியும் தேனும் கலந்துாறும்
RépondreSupprimerகம்பன் கவிபோல் வாழ்வொளிர!
கவியே!
புவி போற்றும் புகழ்ந்துன்னை!
அதைக் கேட்கும் - எம்
செவியோ மகிழ்ந்துன்னை!
வாழ்க! வளர்க!
நட்புடன்,
புதுவை வேலு
Supprimerவணக்கம்!
புதுவைப் புகழ்வேலு பூத்தசொல் யாவும்
மதுவை வழங்கும் மனத்து!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா...
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
தங்கள் குடும்பம் தழைத்தோங்கி வாழ்கவே
மங்கலம் யாவும் மலர்ந்து!
கவிஞரின் புத்தாண்டு கவியால் மனிதம் மலர்ந்து மணம்வீசட்டும்.......
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
வலிப்போக்கன் தந்திட்ட வாழ்த்தேந்தி! நெஞ்ச
மலா்பூக்கும் நன்றே மணந்து!
சிறப்புக் கவிதை வழக்கம்போல்
RépondreSupprimerவெகு வெகு சிறப்பு
பின்னூட்டக் கவிதைகளும்
சிறந்த கவிதைகளாய் தங்கள் பதிவில் மட்டும்
அமைவது கூடுதல் சிறப்பு
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Supprimerவணக்கம்!
நல்ல கவிபாடி நன்றே பதிவேற்றும்
வல்ல கவியை வணங்கு!
வணக்கம் !
RépondreSupprimerஇந்நாள் இனிக்கும் பொன்னாளாக எந்நாளும் மலர்ந்திட
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா !
Supprimerவணக்கம்!
பிறந்துள்ள புத்தாண்டைப் பேணுகின்ற அம்பாள்
சிறந்துள்ளம் காண்க செழித்து!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
சொல்லும் செயலும் சுடா்ந்திடும் வண்ணத்தில்
வெல்லும் துணிவினை வேண்டு!
ஐயா வணக்கம், தாங்களும் தங்கள் குடும்பத்தாரும்
RépondreSupprimerதங்கள் கவிபோல் சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல
இறைவன் அருள் கிடைக்கட்டும்.
Supprimerவணக்கம்!
மாலதி தந்திட்ட வாழ்த்தில் இனிக்கின்ற
பாலதில் ஊறும் படா்ந்து!
RépondreSupprimerவணக்கம்!
சாதி மதத்தைத் தலைமேல் தாித்திட்டால்
நீதி வருமோ நிலத்து!
புத்தாண்டு வாழ்த்துக்கள் அருமை ஐயா...
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
பாிவைக் குமார் பழமெனத் தந்தார்
உாிமையுடன் வாழ்த்தை உவந்து!
எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
RépondreSupprimerபுத்தாண்டு வாழ்த்துக் கவி அருமை ஐயா!
அன்புடனும், நட்புடனும்
துளசிதரன், கீதா
Supprimerவணக்கம்!
அன்புடன் தந்திட்ட ஆரமுத வாழ்த்திற்குப்
இன்புடன் தந்தேன் எனை!
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
வெங்கட் அவா்கள் விளைத்திட்ட வாழ்த்துமலா்
பொங்கல் சுவையெனப் போற்று!
உண்மை தண்மை பெண்மை வெண்மை அற்புதமான சொல்லாடல் !! தளிஞ்சான் பிரான்ஸ்
RépondreSupprimerதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கவிஞர்.
RépondreSupprimerபுத்தாண்டை வரவேற்றவிதம் அருமை. புத்தாண்டு வாழ்த்துக்கள்.
RépondreSupprimerஉண்மை, தண்மை, பெண்மை,வெண்மை என்ற சொல்லாடல்கள் அற்புதம் வாழ்த்துக்கள்
RépondreSupprimer