பாவலர் பயிலரங்க உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
பாவலர் பயிலரங்கம் நடத்தும் விருத்தமாயிரம் எழுதும் கவிவளப் பயிற்சியில் ஐந்நுாறு விருத்தங்கள் பாடித் தொடர்கின்ற திருமதி மாலினி கென்னடி அவர்களுக்குப் பாவலர் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கிறோம்.
வண்டமிழ்ப் பற்றினால் மாலினி கென்னடியார்
தண்ணமுதப் பாக்கள் சமைத்திட்டார்! - கண்டுவந்து
பாடியே பாவலர் பட்டம் அளிக்கின்றேன்!
கோடி மலர்கள் குவித்து!
பாவலர் பட்டம் பெற்ற திருமதி மாலினி கென்றடி அவர்களுக்குப் பாவலர் பயிலரங்க உறவுகள் விருத்தப்பாவில் ஒரு பக்க வாழ்த்து கவிதை பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
திருவள்ளுவர் ஆண்டு 2054/இரட்டை[ஆனி] 29
14.07.2023
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
பாலவர் பயிலரங்கம் பிரான்சு
Aucun commentaire:
Enregistrer un commentaire