samedi 17 octobre 2020

புகழ்மாறன் வெல்வே!


என்மகளுக்கு ஆண்மகன் புகழ்மாறன் பிறந்துள்ளான்!
கொள்ளுத் தாத்தாவின் வாழ்த்துப்பா!
  
புகழ்மாறன் வெல்வே!
  
எடுப்பு
  
மாறன் வந்து பிறந்தான் - புகழ்
மாறன் வந்து பிறந்தான்!
            [மாறன்]
  
தொடுப்பு
  
பேறுகள் பதினாறும் மணக்கத் - தமிழ்ப்
பேரிசை தேனாக இனிக்க...
            [மாறன்]
  
முடிப்பு
  
கல்விக் கலையுற்றுக் கமழ்வான் - பெருங்
கருணை மனமுற்று மகிழ்வான்!
வெல்வம் நிலைபெற்றுத் திகழ்வான் - நறுஞ்
செம்மைக் குறள்கற்றுப் புகல்வான்!
            [மாறன்]
  
அன்பொடு வாழும்முறை அறிவான் - நல்ல
அருளொடு வளரும்நெறி புரிவான்!
பண்பொடு மலரும்வழி பொழிவான்! - இங்குப்
பணிவொடு தமிழின்புகழ் மொழிவான்!
            [மாறன்]
  
கலைமாமணி
கவிஞர் தே. சனார்த்தனன்
புதுவை - 4


2 commentaires:

  1. தங்கள் பெயரன்
    புகழ் மாறனுக்கு வாழ்த்துகள்
    நல் வாழ்த்துகள்

    RépondreSupprimer
  2. இனிய பெயர் புகழ்மாறன். வாழ்த்துகள் புகழ் மாறனுக்கு

    RépondreSupprimer