lundi 7 septembre 2015

ஒன்றில் நான்கு




விண்மதியே வா..வா.. விரைந்து!
[ஒன்றில் நான்கு]

பஃறொடை வெண்பா

கண்ணே! கனிமொழியே! கற்கண்டு காரிகையே!
பெண்ணே! பெருஞ்சுவையே! பேரின்பப் - பண்ணமுதே!
மண்ணே மணக்க மணம்வீசும் மாமலரே!
தண்ணே! தளிர்க்கொடியே! தங்கமே! - ஒண்ணழகே!
விண்மதியே வா..வா.. விரைந்து!

நேரிசை வெண்பா

கண்ணே! கனிமொழியே! கற்கண்டு காரிகையே!
பெண்ணே! பெருஞ்சுவையே! பேரின்பப் - பண்ணமுதே!
மண்ணே மணக்க மணம்வீசும் மாமலரே!
விண்மதியே வா..வா.. விரைந்து!

சிந்தியல் நேரிசை வெண்பா

கண்ணே! கனிமொழியே! கற்கண்டு காரிகையே!
பெண்ணே! பெருஞ்சுவையே! பேரின்பப் - பண்ணமுதே!
விண்மதியே வா..வா.. விரைந்து!

குறள் வெண்பா

கண்ணே! கனிமொழியே! கற்கண்டு காரிகையே!
விண்மதியே வா..வா.. விரைந்து!

இலக்கணக் குறிப்பு!

பஃறொடை வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க 
நேரிசை வெண்பா வரவேண்டும்! 
நேரிசை வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க 
நேரிசைச் சிந்தியல் வெண்பா வரவேண்டும்! 
நேரிசைச் சிந்தியல் வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்கக் 
குறள் வெண்பா வரவேண்டும்.

06.09.2015

17 commentaires:


  1. ஒன்றில் நான்கு!

    வெண்பாவின் வேந்தரே! பண்பாய்ப் படைக்கின்றீர்
    தண்பாக்கள்! யாவும் தமிழூட்டும்! - நண்பரே!
    கண்பார்த்துச் சொக்கும்! கவலை பறந்தோடும்!
    மண்பூத்த சோலை மணம்வீசும்! என்றென்றும்
    எண்ணிலா இன்பம் எனக்கு!

    வெண்பாவின் வேந்தரே! பண்பாய்ப் படைக்கின்றீர்
    தண்பாக்கள்! யாவும் தமிழூட்டும்! - நண்பரே!
    கண்பார்த்துச் சொக்கும்! கவலை பறந்தோடும்!
    எண்ணிலா இன்பம் எனக்கு!

    வெண்பாவின் வேந்தரே! பண்பாய்ப் படைக்கின்றீர்
    தண்பாக்கள்! யாவும் தமிழூட்டும்! - நண்பரே!
    எண்ணிலா இன்பம் எனக்கு!

    வெண்பாவின் வேந்தரே! பண்பாய்ப் படைக்கின்றீர்
    எண்ணிலா இன்பம் எனக்கு!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பாட்டின் மதுவருந்திப் பாடிய வெண்பாக்கள்
      கூட்டும் மகிழ்வைக் குலையாக! - நாட்டமுடன்
      தீட்டும் எழுதெல்லாம் காட்டும் கவிக்கலையை!
      மூட்டும் சுகவுணர்வை! முத்தமிழை - மீட்டியே
      ஓட்டும் துயரை உடன்!

      பாட்டின் மதுவருந்திப் பாடிய வெண்பாக்கள்
      கூட்டும் மகிழ்வைக் குலையாக! - நாட்டமுடன்
      தீட்டும் எழுதெல்லாம் காட்டும் கவிக்கலையை!
      ஓட்டும் துயரை உடன்!

      பாட்டின் மதுவருந்திப் பாடிய வெண்பாக்கள்
      கூட்டும் மகிழ்வைக் குலையாக! - நாட்டமுடன்
      ஓட்டும் துயரை உடன்!

      பாட்டின் மதுவருந்திப் பாடிய வெண்பாக்கள்
      ஓட்டும் துயரை உடன்!

      Supprimer
  2. வணக்கம் ஐயா!

    ஒன்றினில் நான்காய் உருவான வெண்பாக்கள்!
    தென்றலாய் வீசியதே சேர்ந்து!

    அருமையான இன்னுமொரு இலக்கணப் படைப்பு!
    வெண்பாவின் சுவையோ மிக அருமை!
    நானும் முயற்சி செய்கிறேன் ஐயா!

    நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  3. பயனுள்ள பதிவு
    அதிலும்
    இலக்கணக் குறிப்பு!
    பாவலர்களுக்குச் சிறந்த வழிகாட்டல்!

    http://www.ypvnpubs.com/

    RépondreSupprimer
  4. பாக்களை அருமையாய்க் கற்றுக் கொடுக்கிறீர்கள் ஐயா
    நன்றி

    RépondreSupprimer
  5. கண்ணைக் கவர்ந்திழுத்து காட்டும் இன்பச் சொற்குவியல்
    ஒன்றில் நான்காகி ஒப்பிலா புகழ் சேர்க்க...
    வியப்பே மேலிடுகிறது. முயற்சி செய்கிறேன் நன்றிங்க ஐயா.

    RépondreSupprimer
  6. வணக்கம் ஐயா !
    மெய் சிலிர்க்க பார்த்து ரசித்தேன் ஐயா! படைப்புகளைக் கண்டு சொக்கத் தான் முடிகிறது. இனிய இலக்கணப் பதிவுக்கு நன்றி !

    வாழ்க வளமுடன் ...!

    RépondreSupprimer
  7. பஃறொடை வெண்பாவினை அறிந்தோம். நன்றி.

    RépondreSupprimer
  8. வணக்கம் அய்யா,

    தமிழின் தலைமகனே தங்கத்தின் ஒளிச்சுடரே
    தண்மொழிக் காவலரே தரணிவாழ் – தமிழ்மலரே
    படைக்கும் பாவலரே, கவித்தேனே விருச்சமே
    பாடுகிறாய் பலபாக்கள், பாமகனே, நானும் - உமக்கு
    பாடுகிறேன் நன்றி பல


    தமிழின் தலைமகனே தங்கத்தின் ஒளிச்சுடரே
    தண்மொழிக் காவலரே தரணிவாழ் – தமிழ்மலரே
    படைக்கும் பாவலரே, கவித்தேனே விருச்சமே
    பாடுகிறேன் நன்றி பல


    தமிழின் தலைமகனே தங்கத்தின் ஒளிச்சுடரே
    தண்மொழிக் காவலரே தரணிவாழ் – தமிழ்மலரே
    பாடுகிறேன் நன்றி பல


    தமிழின் தலைமகனே தங்கத்தின் ஒளிச்சுடரே
    பாடுகிறேன் நன்றி பல

    அய்யா மன்னிக்க, இது தவழும் குழந்தையின் கிறுக்கல்கள்,விழுந்து எழுந்து நடக்க,,,,,,,

    RépondreSupprimer
  9. வணக்கம் !
    ஒன்றினில் நான்கும்தான் உள்ளத்தில் தேன்சிந்த
    என்றும் இனிக்கும் இவை !

    வாழ்த்துக்கள் .

    RépondreSupprimer
  10. வெண்பா நெஞ்சை அள்ளுது ஐயா.

    RépondreSupprimer
  11. செந்தமிழ்த்தேன் பருக இனிய பூந்தோட்டம் கண்டு பிடித்தேன் ஆசிரியர் ஐயா! பட்டாம்பூச்சியாக வருவேன் சுவைப்பேன்! விதிவசத்தால் தமிழை முழுமையாக ஆழமாகக் கற்றறிய முடியவில்லை, ஆயினும் இரசிக்கும் மனதைப் பெற்றேன் ஆண்டவன் வரமாய்... பகிர்வுக்கு மிகவும் நன்றி ஐயா!

    RépondreSupprimer
  12. வணக்கம் கவிஞர் அண்ணா !

    பஃறொடை வெண்பா
    --------------------------------------------------

    சின்னவன் என்னிடம் செம்பா கமழ்ந்திட
    உன்னருங் கற்கை உயிர்ப்பூட்டும் - என்குருவே
    இன்றமிழின் ஈர்ப்பில் இசைந்தாட இவ்வுலகும்
    குன்றாக் குணங்கொடுத்தாய் கூவக் குரல்கொடுத்தாய்
    முன்னமே தந்தாய் மொழி !


    நேரிசை வெண்பா
    -------------------------------
    சின்னவன் என்னிடம் செம்பா கமழ்ந்திட
    உன்னருங் கற்கை உயிர்ப்பூட்டும் - என்குருவே
    இன்றமிழின் ஈர்ப்பில் இசைந்தாட இவ்வுலகும்
    முன்னமே தந்தாய் மொழி !

    சிந்தியல் வெண்பா
    ---------------------------------

    சின்னவன் என்னிடம் செம்பா கமழ்ந்திட
    உன்னருங் கற்கை உயிர்ப்பூட்டும் - என்குருவே
    முன்னமே தந்தாய் மொழி !

    குறள் வெண்பா !
    --------------------------
    சின்னவன் என்னிடம் செம்பா கமழ்ந்திட
    முன்னமே தந்தாய் மொழி !

    புதிய முறையில் பாவடித்தல் நானும் முயன்றேன் மிக்க நன்றி அண்ணா
    வாழ்க வளமுடன் !
    தம +1

    RépondreSupprimer
  13. அய்யாவணக்கம்,அறிந்தேனென்பதைவிட அருந்தினேன்என்பேன் ஐயா.

    RépondreSupprimer
  14. நன்கொடை விவரங்களை அறிய இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/blog-page_29.html

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    RépondreSupprimer