mardi 22 septembre 2015

கம்பன் விழா 2015

பிரான்சு கம்பன் கழகம் நடத்தும்
பதினான்காம் ஆண்டுக் கம்பன் விழா





 

8 commentaires:

  1. வணக்கம் !
    விழா சிறப்புற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா !

    RépondreSupprimer
  2. தங்களின் பணி போற்றுதற்குரியது. விழா சிறக்க வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
  3. கம்பன் புகழ்பாடும் காவியத்தைப் பார்போற்றும்
    நம்மை அழைத்து நடனமிடும் - எம்மினத்தின்
    சீர்பாட ஏற்றமிகு செந்தமிழை போற்றுமுங்கள்
    பேராவல் போற்றிடும் பெண்.

    ஆடல் பாடலுடன் சிறக்கும் விழாக் காண ஆவல் எழுகிறது என்னிலும் ஆஹா எத்தனை விதமான நிகழ்வுகள் அத்தனையையும் ஏற்பாடு செய்யும் உங்கள் உழைப்பையும் உற்சாகத்தையும் தளராத தன்னம்பிக்கையையும் கண்டு வியந்து நிற்கிறேன். விழாவில் பாவலர் பட்டமதை எனக்கும் வழங்குவது குறித்து பெருமகிழ்ச்சியடைகிறேன். திக்குத்தெரியாத காட்டில் எங்கள் எழுத்துப்பயணத்தை எப்படி கொண்டு செல்வது என்று குழம்பியிருந்த எங்களை செம்மை படுத்த வந்த ஆசானுக்கு எனது வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். விழா சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள் ஐயா.

    RépondreSupprimer
  4. வணக்கம் ஐயா!

    கம்பன் விழாவின் அழைப்பிதழைக்
       கண்டே உள்ளம் மகிழ்கிறதே!
    இம்மி அளவும் இமைக்காமல்
       என்றன் விழியும் இருக்கிறதே!
    செம்மை மிக்க நிகழ்ச்சிகளும்
       சேரும் கவிஞர் பேருரைகள்!
    இம்மண் காணப் போகிறதே!
       எல்லாம் சிறக்க வாழ்த்துகிறேன்!

    விழா அழைப்பிதழும் அரங்கேறப் போகும் நிகழ்ச்சிகளும்
    மிக மிக அழகாக அருமையாக இருக்கிறது ஐயா!

    யாவும் சிறப்பாக நடந்தேற என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  5. Thanks for sharing your info. I truly appreciate your efforts and I am waiting for your next write
    ups thanks once again.

    Take a look at my webpage - web site ()

    RépondreSupprimer
  6. விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer
  7. வணக்கம் கவிஞர் அய்யா !

    தன்னைப் போலும் மாணாக்கர்
    .....தகைமை உடையோர் ஆவதற்கே
    அன்னை ஊட்டும் பிடிசோறாய்
    .....அணைத்துத் தமிழைக் கற்பிக்கும்
    முன்னைப் பிறப்பின் மூத்தோனாய்
    .....முகிழும் கம்பன் வாரிசுமை
    என்றன் இதயக் கூட்டுக்குள்
    ....இருத்தித் தொழுவேன் எப்போதும் !


    மன்றம் கமழ வந்திருக்கும்
    .....மதிகொள் மாந்தர் முன்னிலையில்
    கன்னல் கவிஞர் உங்களினால்
    .....கம்பன் விழாவும் சிறக்கட்டும்
    என்றன் பேரும் விழாமலரில்
    .....இருக்கக் கண்டே என்னுயிரால்
    நன்றி சொல்லும் வார்த்தைகளை
    .... நானிலம் முழுதும் தேடுகிறேன் !

    சிறப்பான அழைப்பிதழ்கள் வாழ்த்துக்கள் அய்யா விழா இனிதே நடைபெற நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் !

    RépondreSupprimer
  8. தமிழ் பாடும் நல்லுறவுகளின் விழா இனிதே சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer