கம்பன் விழாமலரைக் கண்டே களிப்புற்றேன் செம்பொன்னாம் வண்ணச் சிறப்பாக! - நம்புவீர் எம்தமிழ் என்றும் துலங்குமே! நன்றோங்கி அம்புவியை ஆளும் அமர்ந்து!
கம்பன்விழா மலர் கண்ணுக்கும் கருத்துக்கும் நிறைந்த மகிழ்வினைத் தருகிறது! பொன்விழாக் கவிதைப் படைப்புகளும் இணைந்தே இருக்கக் கண்டேன்! மிக மிக அருமை! தரவிறக்கிக் கொண்டேன்.
தங்கள் தமிழ்ப் பணி மேலும் சிறந்தோங்கவும் நாமும் இன்னும் உங்களிடம் கற்றுத் தேர்ந்திடவும் வேண்டி வாழ்த்துகிறேன் ஐயா! மலர்ப் பகிர்விற்கு மிக்க நன்றி!
சிறந்த கலைக் களஞ்சியம்
RépondreSupprimerபாராட்டுகள்!
Supprimerவணக்கம்!
நற்கலைக் களஞ்சியமாய் நல்கிய இம்மலரைப்
பற்றுடன் கற்றல் பயன்
வணக்கம் ஐயா !
RépondreSupprimerகம்பன் விழாமலர் கண்டதும் உள்ளமிங்கே
எம்பிக் குதித்ததே இன்பமதால்!- தம்புகழ்
வாழ்வனைத்தும் மங்காது வானுயர வாழ்த்துகிறேன் !
சூழ்கவே இன்பம் சுடர்ந்து!
அருமையான கம்பன் விழாமலர் அத்தோடு பொன்விழா மலர் !
மகிழ்வின் உச்சியில் இன்று நாமும் !மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .
Supprimerவணக்கம்!
எம்பிக் குதித்தாடி இம்மலரின் சீர்பாடி
அம்பாள் அளித்தார் அரும்வெண்பா! - தும்பிபோல்
துள்ளிப் பறக்கின்றேன்! துாய தமிழமுதை
அள்ளிக் குடிக்கின்றேன் ஆழ்ந்து!
வணக்கம் ஐயா!
RépondreSupprimerகம்பன் விழாமலரைக் கண்டே களிப்புற்றேன்
செம்பொன்னாம் வண்ணச் சிறப்பாக! - நம்புவீர்
எம்தமிழ் என்றும் துலங்குமே! நன்றோங்கி
அம்புவியை ஆளும் அமர்ந்து!
கம்பன்விழா மலர் கண்ணுக்கும் கருத்துக்கும் நிறைந்த
மகிழ்வினைத் தருகிறது!
பொன்விழாக் கவிதைப் படைப்புகளும் இணைந்தே இருக்கக் கண்டேன்!
மிக மிக அருமை! தரவிறக்கிக் கொண்டேன்.
தங்கள் தமிழ்ப் பணி மேலும் சிறந்தோங்கவும்
நாமும் இன்னும் உங்களிடம் கற்றுத் தேர்ந்திடவும் வேண்டி
வாழ்த்துகிறேன் ஐயா!
மலர்ப் பகிர்விற்கு மிக்க நன்றி!
Supprimerவணக்கம்!
செம்பவள வண்ணத்தில் செய்த மலர்படித்து
உம்முளம் இன்பத்தில் ஊறியதால் - அம்புவியே
பாராட்ட வெண்பா படைத்துள்ளீா்! நன்றியால்
சீராட்டி நின்றேன் சிாித்து!
தமிழுக்கு மேலும் ஒரு அணியாய்..மலர்...அருமை அய்யா..
RépondreSupprimerபொன்விழா கண்டபாவலரே
RépondreSupprimerமின்னிடும் வண்ணம் பாவிசைத்து
கண்ணெனவே காத்தீர் நற்றமிழை
நயம்பெறவே நலம் பலபெறுவீர் வாழியவே !
மிக்க மகிழ்ச்சி ஐயா! புவியுள்ளவரை ஓங்கட்டுமும் புகழ் !
RépondreSupprimerபொன்விழாச் சீா்போற்றிப் பூத்த மலா்கண்டேன்!
இன்பலாத் தேன்சுளையை நன்குண்டேன்! - என்தோழா!
பல்லாண்டு வாழ்க! பசுமைக் குறள்நல்கும்
சொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!
நல்ல கருத்துள்ள தொகுப்புகள் அனைத்தயும் அடக்கிய கம்பன் விழா மலர்! வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றோம்! பல ஆண்டுகள் வாழ்ந்து புத்தம் புது மலராய் வெளிவர...
RépondreSupprimer