பாவலர்மணி
வெற்றிச்செல்வி
பிறந்தநாள் வாழ்த்து!
திருவுங் குருவும் அருள்செய்யத்
தீட்டுங் கவிகள்
தேனொழுகப்
பெருகும் அன்பு மனங்கமழப்
பெருமை யாவும்
மனைசேர
உருகும் மெழுகாய் உளந்திகழ
உலகுக் குதவும்
நெறியாள
விருதும் புகழும் வந்தொளிரும்
வெற்றிச் செல்வி
வாழியவே!
வன்மை ஈழ மண்பற்றும்
வண்ணத் தமிழின்
பண்பற்றும்
நன்மை யெல்லாம் இனங்காண
நாளும் வணங்கும்
விண்பற்றும்
தொன்மை மரபை நன்காய்ந்து
தொடர்ந்து கற்றும்
துணிவுற்றும்
மென்மைக் குரலுங் கொண்டொளிரும்
வெற்றிச் செல்வி
வாழியவே!
வான்..மை மேகப் பொழிவாக
வாழ்க்கை சிறக்கும்! ஈடில்லாக்
கோன்மைத் தலைவர் திருவுருவைக்
கிழக்காய் எண்ணி
உளந்துதிக்கும்!
தேன்..மை யூற்றி எழுத்தெல்லாம்
தித்தித் திருக்கும்!
திறம்படைக்கும்!
மேன்மை யாவும் வந்தொளிரும்
வெற்றிச் செல்வி
வாழியவே!
பிள்ளை யாக மனங்கொண்டு
பிறந்த வீட்டின்
குணங்கொண்டு
கிள்ளை யாக எழில்கொண்டு
கீர்த்தி மணக்குஞ்
செயல்கொண்டு
கொள்ளை யாகத் தமிழ்கொண்டு
கோயி லாகக்
குடிகொண்டு
வெள்ளை நாட்டில் பேர்கொண்டு
வெற்றிச் செல்வி
வாழியவே!
பேரன் பேத்தி புடைசூழப்
பெரியோர் வாழ்த்துத்
தினஞ்சூடக்
கீரன் போன்று திறங்கூடக்
கிணறாய் என்றும்
மதியூறத்
தீரன் போன்று கொள்கையிலே
திண்மை கொண்டு
நடைபோட
வீரன் போன்று குளங்காத்து
வெற்றிச் செல்வி
வாழியவே!
பாட்டரசர்
கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன்
கழகம், பிரான்சு
உலகத்
தமிழ்ச் சிறகம்
தொல்காப்பியர்
கழகம், பிரான்சு.
பாவலர்
பயிலரங்கம், பிரான்சு
02.11.2024
Aucun commentaire:
Enregistrer un commentaire