mardi 3 septembre 2013

மன்னன் வருவான்




மன்னன் வருவான்

எடுப்பு

மாலைப் பொழுதில் மன்னன் வருவான் - இளம்
மங்கை மகிழ இன்பம் தருவான்!
                                                                     (மாலை)
தொடுப்பு

காலைக் கதிர்போல் காட்சி அளிப்பான் - இனிய
காதல் உலகில் நீந்திக் குளிப்பான்!
                                                                     (மாலை)
முடிப்பு

அழகுத் தமிழாய்ப் பழக இனிப்பான்!
அன்பு ததும்ப முத்தம் கொடுப்பான்!
மெழுகுச் சிலையின் மேனி சுவைப்பான்!
மெல்ல வந்தே அள்ளி அணைப்பான்!
                                                                     (மாலை)

உலகம் வியக்கும் உயர்ந்த குணத்தோன்!
உண்மை வளர்க்கும் உறுதி படைத்தோன்!
திலகம் போலத் திகழும் மனத்தோன்!
தித்திக் கின்ற செந்தேன் இனத்தோன்!
                                                                     (மாலை)

15.05.1985 

7 commentaires:

  1. அருமை ஐயா.... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  2. சிந்திடும் கற்பனைச் சீர்தான் அதனையும்
    முந்திடும் மங்கை எழில்!

    ரசித்தேன் ஐயா!

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!

    RépondreSupprimer
  3. மன்னவன் வந்தானடி தோழி பாடல்போல்
    இது மன்னவன் வருவானானடி தோழியோ.:)

    அருமை!
    வாழ்த்துக்கள் கவியரசே!

    RépondreSupprimer
  4. பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
    என்பதைப்போல
    எழுதுவோர் எழுதினால்தான் கவிதையின்
    சிறப்பை தமிழின் சிறப்பை உணர முடிகிறது
    மனம் கொள்ளை கொண்ட கவிதை
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    RépondreSupprimer
  5. அழகிய பாடல் போன்று இனித்தது

    வாழ்த்துக்கள் கவிஞரே

    வாழ்க வளமுடன்...

    RépondreSupprimer
  6. எடுத்தபொருள் எதுவெனினும் கொடுத்தவுடனே -தயக்கம்
    எள்ளவும் தடையின்றி கவிதைதன்னை
    தொடுத்துவிடும் திறன்மிக்க பாரதிதாச!-தமிழ்
    தொண்டுதன்னை பாரிஸில் செய்யும்நேச
    உடுக்கைதனை இழந்தார்க்கு கையைப்போல-ஓடி
    உதவுகின்ற தன்மையே உம்மில்சால
    அடுத்தவர்க்கு செய்வதனை நேரில்கண்டேன்-உங்கள்
    அன்பாலே உளம்நெகிழ இங்கேவிண்டேன்

    RépondreSupprimer