அம்பாளடியாள் பிறந்தநாள் வாழ்த்து!
அருமைக் கவிபாடி அம்பாள் அடியாள்
பெருமை பெறுகவே! பெம்மான்
- திருவருளால்
எல்லா வளங்களும் என்றும் இருந்தொளிரப்
பல்லாண்டு வாழ்க படர்ந்து!
அன்பு மலர்க்காடாய், ஆனந்தப்
பொற்காற்றாய்,
நன்கு செழித்த நறுங்கனியாய்,
- என்றென்றும்
அம்பாள் அடியாள் அரும்வாழ்[வு]
அமையட்டும்!
எம்மான் திருவருளை ஏற்று!
என்றமிழ் மாணவி! இன்றேன் இசைவாணி!
தன்னினம் தாங்கும் தமிழச்சி!
- பொன்மனம்
கொண்டொளிரும் அம்பாள் அடியாள்!
குலமோங்கக்
கண்டொளிர வேண்டும் களிப்பு!
கவிஞர் கி. பாரதிதாசன்
16.07.2015
அம்மாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...
RépondreSupprimerஅருமையான வாழ்த்துக்கவி! அம்பாளடியாள் அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
RépondreSupprimerஉங்களுடன் நாங்களும் சேர்ந்து வாழ்த்துகிறோம்.
RépondreSupprimerகவி அருமை ஐயா...
RépondreSupprimerசகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கல்.
வாழ்த்துப் பா நன்று!
RépondreSupprimerஎன்னதவம் செய்தேனோ !இவ்வாழ்துப் போதுமையா!
RépondreSupprimerநன்மையே கூடிவரும் நாளெல்லாம் !-கன்னல்
கவிதந்து வாழ்வித்தாய் ! கற்கண்டுச் சொல்லால்
புவிபோற்ற ஏற்பாய் புகழ் !
வணக்கம் ஐயா!
RépondreSupprimerவாழ்த்தென வரைந்த வெண்பா
வழங்கிய அழகைக் கண்டேன்!
ஆழ்மனக் கடலாற் தந்த
அற்புத முத்தோ சீர்கள்!
மூழ்கிய தேனின் சாறோ?
முன்றலில் தென்றல் வீச்சோ?
கூழெனச் சுவைத்தேன் ஐயா!
கூறினேன் வாழ்த்து! வாழ்க!
அருமையான இனிமையான வெண்பா வாழ்த்து!
அகம் மகிழ்ந்தேன்! வாழ்த்துக்கள் உங்களுக்கும் ஐயா!
அருமைத் தமிழ்மகள் அம்பாள் அடியாள்
பெருமைதரும் பேறு பெறுக! - வருங்காலம்
பாவெனும் போதிலே பாவையிவள் பேர்கூறும்!
பூவையைக் காண்பார் புகழ்ந்து!
அன்புத்தோழி அம்பாளடியாளுக்கும்
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!
அருமையான வெண்பா வாழ்த்து! வழங்கிய ஆசானுக்கு வாழ்த்துக்கள் !
RépondreSupprimerஅம்பாளுக்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
வணக்கம்
RépondreSupprimerதங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துகொள்கிறேன்.
http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_29.html
நன்றி
சாமானியன்
RépondreSupprimerஅம்பாள் அடியாள் அழகுடன் வாழ்கவே!
எம்மான் திருவருளை ஏந்துகவே! - செந்தமிழின்
சீர்பாடி ஓங்குகவே! செல்லும் இடமெல்லாம்
தார்சூடிக் காண்கவே சால்பு!