கிருத்துப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எடுப்பு
யேசு பிறந்தார் - எங்கள்
யேசு பிறந்தார்!
(யேசு)
தொடுப்பு
வீசும் காற்றாக!
விரிநீர் ஊற்றாக!
விண்ணின் ஒளியாக!
மண்ணின் மகிழ்வாக!
(யேசு)
முடிப்பு
கட்டில் தொட்டில் இல்லாமல் - தழைக்
கொட்டில் உள்ளே நற்றேவன்!
கொட்டும் பனியின் காலத்தில் - சிறு
குழந்தை யாக விண்தூதன்!
(யேசு)
உலகை மாற்றிப் போட்டிடவும் - உயர்
உண்மை நெறியை ஊட்டிடவும்!
பலகைத் தொழிலில் ஈட்டிடவும் - புவி
பாவம் அனைத்தும் ஓட்டிடவும!
(யேசு)
பாரின் சுமையைத் தரித்திடவும் - நற்
பண்பை அன்பை வடித்திடவும்!
வேரின் கனிபோல் இனித்திடவும் - ஒண்
சீரின் மறையை அளித்திடவும்!
(யேசு)
காற்றில் நீந்திப் பாடுகவே - தேன்
ஆற்றில் நீந்தி ஆடுகவே!
போற்றி கவிதை சூடுகவே - தொண்டு
ஆற்றி அருளைக் கூடுகவே!
(யேசு)
25.12.2013
வணக்கம்
RépondreSupprimerஐயா.
தேவனைப்பற்றிய பாடல் மிக அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் ஐயா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
வணக்கம்
RépondreSupprimerஐயா.
த.ம 2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
இயேசு பிரான் மீது பாடிய கவிதை வரிகள் அருமை ஐயா. பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
RépondreSupprimerவணக்கம் ஐயா!
RépondreSupprimerஇனிமையோடிசைக்க இசைப்பாடல்!
மிக அருமை!
உளமுருக வேண்டிட ஓடிவந்திடுவான் இறைவனவன்!
உங்களுக்கும் கிறிஸ்மஸ் திருநாள் நல் வாழ்த்துக்களும் ஐயா!
ஏசுவைப்போலே நெஞ்சில்
RépondreSupprimerஇனிக்கின்ற கவிதை தந்தீர்!
வாழிய!
போற்றுதற்கு உரிய புண்ணியனே - உந்தன்
RépondreSupprimerபோகப் பிறப்பெங்கே மீண்டும்
மாற்றங்கள் வேண்டும் இங்கே - நீயும்
மறுபடி பிறப்பையோ மண்ணில்
அருமையான இசைப்பாடல்
வாழ்த்துக்கள் கவிஞரே
இனிய நத்தார்தின நல்வாழ்த்துக்களும்
ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்களும்
வாழ்கவளமுடன்
த ம 8
கவிதை அருமை....
RépondreSupprimerகாற்றில் நீந்திப் பாடுகவே - தேன்
RépondreSupprimerஆற்றில் நீந்தி ஆடுகவே!
போற்றி கவிதை சூடுகவே - தொண்டு
ஆற்றி அருளைக் கூடுகவே!
அருமை ....! என் இனிய நத்தார் தின வாழ்த்துக்களும்,
புத்தாண்டு வாழ்த்துகளும் உரித்தாகட்டும்....!